வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் போன்ற டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் என மிகப்பெரிய தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.
அந்த வகையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட இருக்கிறது. எதிர்வரும் ஜூலை 12-ஆம் தேதி முதல் துவங்க இருக்கும் இந்த தொடருக்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்துள்ள இந்திய அணியானது தற்போது பயிற்சி போட்டியிலும் பங்கேற்று விளையாட இருக்கின்றது.
இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்திற்கான டி20 தொடருக்கான இந்திய அணி மட்டும் இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் அடுத்த 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடருக்காக தற்போதிலிருந்தே இந்திய அணியை தயார் படுத்தும் விதமாக ஹார்திக் பாண்டியா தலைமையில் புதிய ஒரு அணியை அறிவிக்க பிசிசிஐ-யை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சீனியர் வீரர்களை தவிர்த்து அணியில் புத்துணர்ச்சியை கொண்டுவரும் விதமாக முற்றிலும் இளம்வீரர்களே அணியில் வைத்திருக்கவும் பி.சி.சி.ஐ விரும்புகிறது.
மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரர் விராட் கோலி ஆகியோரை இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் பிசிசிஐ இணைக்க விரும்பவில்லை என்றும் அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களான சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் போன்ற வீரர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : சென்னைக்கு புதுசா? முக்கிய ஜாம்பவான் இல்லாமல் தனது ஆல் டைம் சிஎஸ்கே அணியை தேர்ந்தெடுத்த கான்வே – கலாய்க்கும் ரசிகர்கள்
அதோடு ஐபிஎல் தொடரில் கலக்கிய ரிங்கு சிங்-க்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. மேலும் இனிவரும் டி20 தொடர்களிலும் சீனியர் வீரர்களான ரோஹித் மற்றும் விராட் கோலியை பார்ப்பது கடினம் என்றும் முக்கியமான தொடர்களில் மட்டுமே அவர்கள் விளையாடுவார்கள் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.