இவர் இப்படி பேட்டிங் பண்ணா ஜாலியா உக்காந்து பாக்கலாம். என்னா அடி – வியந்து போன சேவாக்

Sehwag
- Advertisement -

கேப்டவுன் நகரில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியானது இன்று மூன்றாவது நாளை நிறைவு செய்துள்ளது. இன்றைய மூன்றாவது நாளில் இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய போது முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். குறிப்பாக மூன்று வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை அடித்தனர். மற்ற அனைவரும் 10 ரன்களுக்குள் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆனால் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பண்ட் மட்டும் தனது அற்புதமான அதிரடி ஆட்டத்தை இந்த இன்னிங்சில் வெளிப்படுத்தினார். 139 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் என 100 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் இந்த மைதானத்தில் ரன்களை குவிக்க தடுமாறிய வேளையில் ரிஷப் பண்ட் மட்டும் சரமாரியாக ரன்களை அடித்து நொறுக்கினார்.

- Advertisement -

அவருக்கு யாராவது ஒருவர் நல்ல பாட்னர்ஷிப் கொடுத்திருந்தால் கூட அவரால் இன்னும் நிறைய ரன்களை குவித்து இருக்க முடியும். ஆனால் ஒருபுறம் அவர் சிறப்பாக விளையாடினாலும் மறுபுறம் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்ததால் இறுதியில் அவர் போராடித்தான் சதமடித்தார். அதுமட்டுமின்றி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரது இந்த சிறப்பான சதத்திற்கு தற்போது பாராட்டுகள் பல்வேறு தரப்பிலிருந்தும் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் ரிஷப் பண்ட்டின் இந்த அபாரமான ஆட்டத்தை பார்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் பண்ட் விளையாடிய விதம் குறித்து பதிவு செய்த ஒரு கருத்தில் : ரிஷப் பண்ட் இப்படி விளையாடும் போது நாம் ப்ரீயாக அமர்ந்து போட்டியை பார்க்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலியின் தலைமையில் பும்ரா இன்று படைத்துள்ள சாதனை பற்றி தெரியுமா? – விவரம் இதோ

அதேபோன்று சதம் அடித்ததும் அந்த புகைப்படத்தை பகிர்ந்து இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தவிர்த்து இரண்டு வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை குவித்துள்ளனர். ஆனால் ஒரே ஆளாக போட்டியை மாற்றியுள்ளார் ரிஷப் பண்ட். இந்திய அணியின் மிகச்சிறந்த மேட்ச் வின்னர்களில் பண்டும் ஒருவராக திகழ்கிறார் என்று சேவாக் புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement