விராட் கோலியின் தலைமையில் பும்ரா இன்று படைத்துள்ள சாதனை பற்றி தெரியுமா? – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது போட்டியில் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி தற்போது நான்காவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. முன்னதாக இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 223 ரன்களும், தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களும் குவித்தனர்.

pant 1

- Advertisement -

பின்னர் 13 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. இறுதியில் 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த 2 ஆவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் சதமடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான சாதனை ஒன்றினை கோலியின் தலைமையின் கீழ் நிகழ்த்தியுள்ளார்.

bumrah 1

அதன்படி இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார். இப்படி இந்த விக்கெட்டுகள் மூலம் கோலியின் தலைமையின் கீழ் அவர் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனையை படைத்துள்ளார். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 113 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : கடைசி இன்னிங்சில் ரிஷப் பண்ட் அடித்த சதத்தை புகழ்ந்து ஐ.சி.சி வெளியிட்ட பதிவு – வாட் எ நாக்

அதில் கோலியின் தலைமையின் கீழ் மட்டும் 24 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 103 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறப்பான பந்துவீச்சாக உள்ளது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஏழு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement