கடைசி இன்னிங்சில் ரிஷப் பண்ட் அடித்த சதத்தை புகழ்ந்து ஐ.சி.சி வெளியிட்ட பதிவு – வாட் எ நாக்

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வரும் வேளையில் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு சம நிலையில் உள்ளதால் இந்த போட்டி மேலும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11-ஆம் தேதி துவங்கிய இந்த கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 223 ரன்களை குவித்தது. அதனைத் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 210 ரன்களை மட்டுமே குவித்தது.

இந்திய அணி 13 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. அதன்படி இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 198 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால் தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு கடைசி இன்னிங்சில் 212 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய வீரர்கள் அனைவரும் ரன்கள் எடுக்க தடுமாறிய நிலையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

குறிப்பாக இந்திய வீரர்களில் ஒருவர் கூட 30 ரன்களை தொடாத வேளையில் பண்ட் மட்டும் 139 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் என 100 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரின் இந்த சிறப்பான ஆட்டம் தற்போது அதிக அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஏனெனில் இந்திய அணி 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது தனது அதிரடியான ஆட்டத்தை கோலியுடன் இணைந்து வெளிப்படுத்தினார்.

ஒருபுறம் கோலி நிதானமாக விளையாட மறுபக்கம் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடினார். பின்னர் கோலியும் ஆட்டமிழந்து வெளியேறியதும் பின் வரிசையில் வந்த வீரர்கள் யாரும் அவருக்கு பெரிய அளவில் பார்ட்னர்ஷிப் கொடுக்கவில்லை என்றாலும் கிடைக்கும் பந்துகள் எல்லாம் பவுண்டரிகளும், சிக்ஸருமாக பறக்கவிட்ட அவர் சதத்தை பூர்த்தி செய்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியில் அவங்க 2 பேர் தான் எங்களுக்கு தலைவலியா இருக்காங்க – தெ.ஆ வீரர் வெளிப்படை

இந்நிலையில் அவரது இந்த சதத்தினை பாராட்டும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவர்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது. அதில் ரிஷப் பண்ட் 100 ரன்கள், மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சேர்த்து 70 ரன்கள் என்ற கருத்தினை பகிர்ந்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ரிஷப் பண்டை பாராட்டியுள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement