இந்திய அணியில் அவங்க 2 பேர் தான் எங்களுக்கு தலைவலியா இருக்காங்க – தெ.ஆ வீரர் வெளிப்படை

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் இருப்பதால் இந்த இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Elgar

- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 223 ரன்களை குவித்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 210 ரன்களில் ஆட்டமிழக்க 13 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது 198 ரன்கள் குவித்தது.

இதன் காரணமாக தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 212 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்சில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை சிறப்பாக பந்துவீசி வீழ்த்தியுள்ளதால் நிச்சயம் இந்த இன்னிங்சிலும் அவர்களை வீழ்த்தி வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

pujara 1

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடி வரும் தென்னாபிரிக்க அணியின் வீரரான கீகன் பீட்டர்சன் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்த இன்னிங்சில் இந்திய வீரர்கள் விளையாடி வரும் விதம் குறித்து பேசியிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் : புஜாராவும் கோலியும் எங்கள் அணிக்கு தலைவலி கொடுக்கும் அளவிற்கு விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : அவரை எதுக்கு டீம்ல சேக்க மாட்றீங்க. இந்திய சீனியர் வீரருக்காக கோலியை கேள்வி கேட்கும் – ஷான் பொல்லாக்

அவர்களை விரைவில் வீழ்த்தியாக வேண்டும் அது மட்டுமே எங்களது இலக்கு. ஏனெனில் கடந்த சில போட்டிகளில் கோலி புஜாரா ஆகியோர் எங்கள் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement