அவரை எதுக்கு டீம்ல சேக்க மாட்றீங்க. இந்திய சீனியர் வீரருக்காக கோலியை கேள்வி கேட்கும் – ஷான் பொல்லாக்

Pollock
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பங்கு பெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் விறுவிறுப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது, முன்னதாக இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இரு அணிகளும் தலா 1 வெற்றியை பெற்றதால் இந்த தொடர் சமநிலையில் உள்ளது. இதை தொடர்ந்து இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது டெஸ்ட் போட்டி தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, பின்னர் தென்ஆப்பிரிக்காவை 210 ரன்களுக்கு சுருட்டியதால் 13 ரன்கள் முன்னிலை பெற்று தற்போது தனது 2வது இன்னிங்ஸ்சில் விளையாடி வருகிறது. முன்னதாக இந்த போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முகமது சிராஜ் காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.

Petersen

- Advertisement -

கழட்டிவிடப்படும் இஷாந்த்:
இருப்பினும் சிராஜ்க்கு பதில் இந்திய அணியில் அனுபவ வீரராக இருக்கும் இசாந்த் சர்மா சேர்க்கப்படுவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஏனெனில் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி அனுபவம் கொண்ட அவர் கடந்த சில வருடங்களாகவே வெளிநாடுகளில் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா பவுலர்கள் உயரமாக இருப்பதன் காரணமாக பிட்ச்சில் கிடைக்கும் “எக்ஸ்ட்ரா பவுன்ஸ்” பயன்படுத்தி விக்கெட்டுகளை எடுத்து வருகிறார்கள். மறுபுறம் இந்திய பவுலர்கள் அவர்களை விட சற்று உயரம் குறைவாக இருப்பதால் அந்த அதிகப்படியான பவுன்சை பயன்படுத்த முடியவில்லை என 2வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த பின் இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

ishanth 2

காரணத்தை சொல்லுங்க:
அப்படிப்பட்ட வேளையில் 3வது போட்டியில் அவருக்கு வாய்ப்பளிக்க படாதது சில கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் சீனியர் பவுலராக இருக்கும் இஷாந்த் சர்மாவை இந்திய அணி நிர்வாகம் நடத்தும் விதம் திருப்தி அளிக்கவில்லை என தென் ஆப்பிரிக்காவின் ஜாம்பவான் ஷான் பொல்லாக் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர்,

- Advertisement -

“இது பற்றிய தகவல் தொடர்பு நல்லபடியாக இருக்க வேண்டும், இந்திய அணிக்கு அவர் (இஷாந்த்) ஆற்றியுள்ள பங்கிற்காக அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அவரிடம் நீங்கள் உண்மையாக நடந்து கொள்வதுடன் அவரை தேர்வு செய்யாததன் சரியான காரணத்தை கூற வேண்டும். ஒருவேளை “எதிரணியில் நிறைய இடது கை ஆட்டக்காரர்கள் இல்லாத தருணமே உனக்கு பொருந்தும்” என்பது அந்த காரணமாக இருந்தால் அதை அவரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும்” என தெரிவித்த பொல்லாக் இசாந்த் சர்மா பெஞ்சில் அமர வைக்கப்படுவதற்கு உண்டான காரணம் எதுவாக இருந்தாலும் அதை வெளிப்படையாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Ishanth

அனுபவத்தை பாருங்க:
“இவ்வளவு கிரிக்கெட் விளையாடி அணிக்காக இவ்வளவு உழைத்த பின் அணிக்கு வெளியே அமர வைக்கப்படுவது எளிதானதல்ல. தென் ஆப்பிரிக்காவில் நிலவும் சூழ்நிலைகளை பார்த்த பின்னர் இஷாந்த் சர்மா கண்டிப்பாக வாய்ப்புக்காக ஏங்குவார். குறிப்பாக முதல் 2 டெஸ்ட் பிட்ச்களை பார்த்த பின் “இதுபோன்ற பிட்ச்சில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால் நிச்சயமாக என்னால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க முடியும்” என அவருக்கு தோன்றியிருக்கும்” என இது பற்றி மேலும் தெரிவித்த ஷான் பொல்லாக் தென்னாப்பிரிக்காவில் தற்போது நிலவும் கால சூழ்நிலைகள் மற்றும் பிட்ச் இஷாந்த் சர்மாவுக்கு மிகவும் ஏற்றது எனவும் ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே எனவும் கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க : ஷான் பொல்லாக்கின் மிகப்பெரிய சாதனையை அறிமுக தொடரில் தகர்த்த இளம்வீரர் – விவரம் இதோ

அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றாலும் கூட இந்திய கிரிக்கெட்டுக்காக 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி பங்காற்றியுள்ள அவரிடம் பெஞ்சில் அமர வைக்கப்படுவதற்கான காரணத்தை தெளிவாக குறிப்பிட்டு அவரை மரியாதையுடன் நடத்த வேண்டும் எனவும் அதற்கு இசாந்த் சர்மா தகுதியானவர் எனவும் ஜாம்பவான் ஷான் பொல்லாக் கூறியுள்ளார்.

Advertisement