ஷான் பொல்லாக்கின் மிகப்பெரிய சாதனையை அறிமுக தொடரில் தகர்த்த இளம்வீரர் – விவரம் இதோ

Jansen
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் இருந்தன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 11-ஆம் தேதி கேப்டவுன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் விளையாடியது.

Petersen

அதன்படி இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 223 ரன்கள் மட்டுமே குவித்து ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க அணி சார்பாக ரபாடா 4 விக்கெட்டுகளையும், மார்க்கோ யான்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 210 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது இந்திய அணி 13 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணியின் அறிமுக இளம் வீரரான மார்கோ யான்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னாள் ஜாம்பவான் ஷான் பொல்லாக்கின் மிகப்பெரிய சாதனை ஒன்றையும் முறியடித்துள்ளார்.

jansen 1

அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகி அந்த ஒரே தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற சாதனையை பொல்லாக் இடமிருந்து யான்சன் தட்டி பறித்துள்ளார். கடந்த 1995ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஷான் பொல்லாக் அறிமுக தொடரில் 16 வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது.

இதையும் படிங்க : தென் ஆப்பிரிக்காவால் வீணடிக்கப்பட்ட ஒரு திறமை வீரர். ஐபிஎல் தொடரில் அவர் செய்த 3 சிறந்த சம்பவங்கள்

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமாகிய மார்கோ யான்சன் தற்போது 3-வது போட்டியில் விளையாடி வரும் வேளையில் இரண்டாவது இன்னிங்சின் போது புஜாராவின் விக்கெட் கைப்பற்றியதன் மூலம் இந்த அறிமுக தொடரில் 17 விக்கெட் வீழ்த்தி அவரது சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement