தென் ஆப்பிரிக்காவால் வீணடிக்கப்பட்ட ஒரு திறமை வீரர். ஐபிஎல் தொடரில் அவர் செய்த 3 சிறந்த சம்பவங்கள்

Morris
- Advertisement -

ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார், அவரின் இந்த அறிவிப்பு தென் ஆப்பிரிக்கா மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். ஏனெனில் தற்போது வெறும் 34 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் டி20 கிரிக்கெட்டில் ஒரு மிகச்சிறந்த வீரராக வலம் வந்தவர்.

Morris

தென்ஆப்பிரிக்க அரசியல்:
தென்ஆப்பிரிக்காவுக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தம் 69 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் குறைந்தது இன்னும் 3 வருடங்கள் விளையாட தகுதியானவராக தென்படுகிறார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் ஐபில் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் பிரீமியர் லீக் தொடர்களில் இவர் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வந்தார் எனக் கூறலாம், இருப்பினும் இந்த வயதிலேயே அவர் ஓய்வுபெற தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தில் நிலவும் அரசியல் ஒரு மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

- Advertisement -

வீணடிக்கப்பட்ட திறமை:
டு பிளேஸிஸ், இம்ரான் தாஹிர், கிறிஸ் மோரிஸ் போன்ற தரமான வீரர்கள் ஐபிஎல் போன்ற தொடர்களில் ஜொலித்த வேளையில் அவர்களை தென்னாப்பிரிக்க நிர்வாகம் சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யாமல் கழட்டி விட்டது. அதன் காரணமாக பல வீரர்கள் ஓய்வு பெறுவது, வெளிநாடுகளுக்கு விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில்கூட தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி காக் வெறும் 30 வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை ஒரு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இப்படி தென் ஆப்பிரிக்கா வீணடித்த திறமை வாய்ந்த வீரர்களில் தற்போது கிறிஸ் மோரிஸ் இணைந்துள்ளார்.

Morris

ஐபிஎல் சாதனை:
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகளுக்காக ஐபிஎல் வரலாற்றில் மொத்தம் 81 போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் மோரிஸ் அதில் 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.கடந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 16.25 கோடிகளுக்கு ராஜஸ்தான் அணியால் விலை போன இவர் “ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஏலத்தில் அதிக தொகைக்கு விலைபோன வீரர்” என்ற பெருமை மிகுந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். 3 தருணங்கள்: இந்த நேரத்தில் ஐபிஎல் தொடரில் அவரின் 3 சிறந்த தருணங்கள் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. 36* ரன்கள் & 1 விக்கெட்:
ஐபிஎல் 2021 தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 147/8 ரன்கள் எடுத்தது, அதில் 3 ஓவர்கள் வீசிய மோரிஸ் 27 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். பின் 148 என்ற எளிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் 17/3 என மோசமான தொடக்கம் பெற்று பின்னர் 42/5 என தோல்வி பெறும் தருவாயில் இருந்தது. அப்போது களமிறங்கிய மோரிஸ் டேவிட் மில்லர் உடன் இணைந்து கடைசி நேரத்தில் வெறும் 18 பந்துகளில் 4 இமாலய சிக்ஸர்களை பறக்க விட்டு 36* ரன்கள் குவித்து ராஜஸ்தானை வெறும் 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற செய்தார்.

morris 1

2. 4 விக்கெட்கள் : கடந்த 2020 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய அவர் ராஜஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட 4 விக்கெட்களை சாய்த்து அசத்தினார். இவரின் சிறப்பான பந்துவீச்சால் பின்னர் 178 என்ற இலக்கை துரத்திய பெங்களூரு ஏபி டிவில்லியர்ஸ் அதிரடியாக 55* (22) ரன்கள் எடுக்க 7 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : எப்பா ! என் வாழ்நாளில் இதுபோன்ற பாஸ்ட் பவுலிங்கை பார்த்ததே இல்லை – மிரண்டு போன தெ.ஆ வீரர் பேட்டி

3. 4 விக்கெட்கள் :
கடந்த 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக கிறிஸ் மோரிஸ் விளையாடினார். அந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஒரு போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ஷேன் வாட்சன் அதிரடியாக 104* ரன்கள் விளாச 20 ஓவர்களில் 199/6 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்களை துரத்திய கொல்கத்தா 20 ஓவர்களில் 190/9 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. அந்த போட்டியில் கௌதம் கம்பீர், ஆண்ட்ரே ரசல், சூரியகுமார் யாதவ், சாகிப் அல் ஹசன் ஆகிய 4 தரமான பேட்டர்களை அவுட் செய்த மோரிஸ் ராஜஸ்தானின் வெற்றிக்கு உதவினார்.

Advertisement