எப்பா ! என் வாழ்நாளில் இதுபோன்ற பாஸ்ட் பவுலிங்கை பார்த்ததே இல்லை – மிரண்டு போன தெ.ஆ வீரர் பேட்டி

Petersen
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்கா பங்கேற்று வருகிறது, இதில் முதலில் நடந்த போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற போதிலும் 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு தக்க பதிலடி கொடுத்தது. இதனால் தொடரை 1 – 1* என சமன் செய்த தென்ஆப்பிரிக்கா சொந்த மண்ணில் இந்தியாவை மீண்டும் சாய்த்து தொடரை கைப்பற்றுவதற்காக கேப் டவுனில் நடைபெற்று வரும் 3வது போட்டியில் விளையாடி வருகிறது.

INDvsRSA

- Advertisement -

இந்தியா அபார பவுலிங்:
முன்னதாக இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 300 ரன்களை எட்டும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அபாரமாக பந்துவீசிய தென் ஆப்பிரிக்கா வெறும் 223 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது, அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா 4 விக்கெட்டுகளையும் இளம் வீரர் மேக்ரோ ஜென்சென் 3 விக்கெட்களையும் சாய்த்து இந்தியாவை கலங்கடித்தனர்.

ஆனால் “நாங்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா” என்பது போல அடுத்ததாக களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவை அபாரமாக பந்துவீசிய இந்திய பவுலர்கள் வெறும் 210 ரன்களுக்கு சுருட்டி இந்தியாவுக்கு 13 ரன்கள் முன்னிலை பெற்று கொடுத்தனர். இந்தியா சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளும் முகமது சமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

petersen 1

போராடிய பீட்டர்சன்:
வெற்றியாளரை தீர்மானிக்கும் இந்த முக்கியமான போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ்சில் இதர பேட்டர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில் அந்த அணியின் “கீகன் பீட்டர்சன் மட்டும் தனித்து நின்று 166 பந்துகளை நிதானத்துடன் சந்தித்து 9 பவுண்டரிகள் உட்பட அரைசதம் கடந்து 72 ரன்கள்” குவித்து போராடினார். ஆனால் அவரையும் விட்டுவைக்காத இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முக்கியமான வேளையில் அவரை அவுட் செய்து பெவிலியனுக்கு திருப்பி அனுப்பியதுடன் போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பினார்.

- Advertisement -

எப்பா என்னா பவுலிங்:
இந்நிலையில் தனது வாழ்நாளில் இது போன்றதொரு வேகப்பந்து வீச்சை இதற்கு முன் சந்தித்ததில்லை என தென் ஆப்பிரிக்காவுக்காக நேற்றைய போட்டியில் போராடிய கீகன் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் அளித்த பேட்டியில்,”இந்த இந்திய வேக பந்துவீச்சு கூட்டணி மிகவும் சவாலானது. சொல்லப்போனால் எனது கிரிக்கெட் வாழ்நாளில் நான் சந்தித்ததிலேயே இது மிகவும் சவாலானது. இவர்களிடம் நீங்கள் அனைத்து நேரமும் கூர்ந்த கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது இல்லையேல் அவர்கள் உங்களை அவுட் செய்து காட்டிவிடுவார்கள்.

IND

அவர்கள் நீங்கள் ரன்கள் அடிக்கும் முறையை சோதிப்பதுடன் ரன்கள் அடிப்பதற்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்கள். சொல்லப்போனால் உலகிலேயே அவர்கள் ஒரு மிகசிறந்த பாஸ்ட் பவுலிங் அட்டாக் என கூறலாம். இது இந்த தொடர் துவங்கும் முன்னரே எங்களுக்கு தெரியும் எனவே அதை சமாளிக்க உள்ளோம்” என மிரண்ட வகையில் கூறிய அவர் இந்திய பவுலர்களுக்கு எதிராக ரன்கள் குவிப்பது மிகவும் கடினமாக உள்ளது எனவும் உலகில் தற்போதய தேதியில் “இந்தியா மிகச்சிறந்த பாஸ்ட் பவுலிங் அட்டாக்கை” கொண்டுள்ளதாகவும் மனதார பாராட்டினார்.

இதையும் படிங்க : டிராவிட், சச்சின், லக்ஷ்மன் ஆகிய ஜாம்பவான்களுடன் எலைட் சாதனை பட்டியலில் இணைந்த – விராட் கோலி

அத்துடன் நடைபெற்று வரும் இந்த 3வது டெஸ்ட் போட்டியின் 3வது நாளில் களத்தில் இருக்கும் இந்தியாவின் அனுபவ வீரர்களான “விராட் கோலி மற்றும் செட்டேஸ்வர் புஜரா” ஆகியோர் உலகத்தரம் வாய்ந்த பேட்டர்கள் என புகழ்ந்துள்ள கீகன் பீட்டர்சன் 3வது நாளில் தென்ஆப்பிரிக்காவிற்கு அவர்கள் தலைவலியை கொடுப்பதற்கு முன் அவர்களின் விக்கெட்டுகளை எப்படியாவது எடுக்க வேண்டும் எனவும் அந்த பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement