- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலி ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டாரு.. நிச்சயம் அவர் இதை செய்ஞ்சிருக்கனும் – வீரேந்திர சேவாக்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 30 சதம் மற்றும் 31 அரைசதம் என 9,230 ரன்கள் எடுத்திருக்கும் வேளையில் தனது 36-வது வயதிலேயே இப்படி திடீர் ஓய்வை அறிவிப்பு வெளியிட்டது அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்தது.

விராட் கோலி செய்தது ஏமாற்றம் அளிக்கிறது : விரேந்தர் சேவாக்

ஏனெனில் தற்போது 36 வயதான அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடும் அளவிற்கு முழு உடற்தகுதியுடன் இருந்தும் அவர் விரைவிலேயே ஓய்வறிப்பை வெளியிட்டது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் ஓராண்டு விளையாடினால் கூட நிச்சயம் அவரால் 10000 ரன்களை எடுத்திருக்க முடியும் என்கிற வேளையில் அவர் முன்கூட்டியே ஓய்வை அறிவித்தது பலருக்கு மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

விராட் கோலி இப்படி ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டிருந்த வேளையில் அவருக்கு பலரது மத்தியிலும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. ஆனாலும் ஒரு சிலர் விராட் கோலி இன்னும் சில ஆண்டுகள் விளையாடி இருக்கலாம் என்ற தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் மற்ற வீரர்களை விட மிகவும் சிறப்பாக செயல்படும் விராட் கோலி இன்னும் 2 ஆண்டுகள் விளையாடியிருக்க முடியும் என்றும் அவர் முன்கூட்டியே ஓய்வு முடிவை அறிவித்து ஏமாற்றத்தை அளித்து விட்டார் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

விராட் கோலியிடம் இன்னும் ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற வேட்கை இருக்கிறது. அவர் இந்த இடத்திற்காக மிகவும் உழைக்கிறார். தான் எவ்வளவு தூரம் விளையாட வேண்டும் என்பது நன்றாக அவருக்கு தெரியும். அவர் சிறப்பாக விளையாடுகிறாரோ, இல்லையோ அது பிரச்சனை கிடையாது ஆனால் இன்னுமும் மற்ற வீரர்களை விட அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார்.

இதையும் படிங்க : 14 வயசை பாக்கல.. அவரோட திறமையை தான் பாக்குறேன்.. தனது ஓப்பனிங் இடத்தை வழங்கியது குறித்து – சாம்சன் பேட்டி

என்னை பொறுத்தவரை தற்போது 36 வயதான அவர் அனைவரையும் விட பிட்டாக இருக்கிறார் என்று கூறுவேன். அதனால் தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவர் ஓய்வு பெற்று விட்டார் என்று நினைக்கிறேன் என சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -