14 வயசை பாக்கல.. அவரோட திறமையை தான் பாக்குறேன்.. தனது ஓப்பனிங் இடத்தை வழங்கியது குறித்து – சாம்சன் பேட்டி

Samson and Suryavanshi
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 59-வது லீக் போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அவரோட திறமையை நான் மதிக்குறேன் : சஞ்சு சாம்சன்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக நேஹல் வதேரா 70 ரன்களையும், ஷஷாங்க் சிங் 59 ரன்களையும் குவித்தனர். பின்னர் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய :

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை மட்டுமே குவித்ததால் 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி இந்த போட்டியில் அசத்தலான வெற்றியை பெற்று தங்களது பிளே ஆப் வாய்ப்பையும் உறுதி செய்தது. அதேவேளையில் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த தொடரில் தங்களது பத்தாவது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது சஞ்சு சாம்சன் மீண்டும் ராஜஸ்தான் அணிக்கு திரும்பியதால் வைபவ் சூரியவன்சி பேட்டிங் ஆர்டரில் கீழே செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் எப்போதுமே ஜெய்ஸ்வால் மற்றும் சாம்சன் ஆகியோர்தான் துவக்க வீரர்களாக அந்த அணிக்காக விளையாடி வந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியில் எந்த மாற்றமும் இல்லாமல் ஜெய்ஸ்வாலுடன் வைபவ் சூர்யவன்சி களமிறங்கினார். சஞ்சு சாம்சன் மூன்றாவது வீரராகவே விளையாடினார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பேட்டிங் ஆர்டர் குறித்து பேசியிருந்த சஞ்சு சாம்சன் கூறுகையில் : வைபவ் சூர்யவன்சி எந்த வரிசையில் பேட்டிங் செய்கிறாரோ அதை நான் மதிக்கிறேன்.

இதையும் படிங்க : நான் கேப்டன் இல்லன்னு நினைச்சுகிட்டு அதை செய்றேன்.. டெல்லியை சாய்த்தது பற்றி கில் பேட்டி

ஏனெனில் அவர் எங்களது அணிக்காக துவக்க வீரராக களமிறங்கி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அவரது வயதை பார்க்காமல் திறமைக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதன் காரணமாகவே அவருக்கு எனது இடத்தை வழங்கி நான் கீழ இறங்கி விளையாடினேன் என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement