சச்சின் டெண்டுல்கர் பண்ண அதே விஷயத்தை விராட் கோலி இனிமேல் பண்ணனும் – சேவாக் ஓபன்டாக்

Sehwag
- Advertisement -

இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்-க்கும் கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாடி வந்த விராட் கோலி பணிச்சுமை காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியதும் தனது டி20 கேப்டன் பதவியை துறந்தார். இந்த உலகக் கோப்பை தொடருக்கு அடுத்து தற்போது இந்திய அணி அடுத்ததாக நவம்பர் 17-ஆம் தேதி இந்தியாவில் நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான அணியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள வேளையில் ரோகித் சர்மா புதிய கேப்டனாக இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.

Rohith

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலி பதவி விலகியதை தொடர்ந்து இந்திய அணியில் அவர் ஆற்ற வேண்டிய புதிய பணி குறித்த கருத்தினை இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சச்சின் டெண்டுல்கர் அவர் விளையாடிய காலத்தில் இந்திய அணிக்காக என்ன செய்தாரோ அதையே விராட் கோலி இந்திய அணிக்காக செய்ய வேண்டும்.

சச்சின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தபோது பல்வேறு கேப்டன் கிரிக்கெட் விளையாடினார். குறிப்பாக கங்குலி, டிராவிட், தோனி என பலரது கேப்டன்சியின் கீழும் அணியின் அனுபவ வீரராக விளையாடிய சச்சின் தனது பணியை சிறப்பாக செய்தார். அவரது அனுபவங்களை, ஆலோசனைகளை கேப்டன்களுடன் பகிர்ந்து கொண்டார். அதேபோன்று கோலி இப்போது புதிய அவதாரத்தை எடுக்க வேண்டியது அவசியமான ஒன்று.

sachin 1

ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டாலும் சீனியர் வீரராக அவர் அவ்வப்போது தனது ஆலோசனைகளை ரோஹித்துக்கு வழங்கலாம். அது மட்டுமின்றி கோலியும் பல ஆண்டுகள் கேப்டன்சி செய்துள்ளதால் நிச்சயம் அவர் அவருடைய அனுபவம் ரோகித் சர்மாவிற்கு உதவும். அதே போன்று அணியின் சீனியர் வீரராக அவர் பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். சச்சின் அப்போதைய இந்திய அணியில் என்ன செய்தாரோ அதை இப்போது கோலி செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த தம்பி மட்டும் இப்படியே ஆடுனா. உலகின் மிகச்சிறந்த வீரராக வருவாரு – கவாஸ்கர் புகழாரம்

கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவருமே சிறப்பான வீரர்கள். நிச்சயம் அவர்களுக்குள் நல்ல புரிதல் இருக்கும் என்றும் விராட் கோலி தனது புதிய பணியை சிறப்பாக செய்வார் என்றும் சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது. புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை இப்போதிருந்தே பலப்படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement