இந்த தம்பி மட்டும் இப்படியே ஆடுனா. உலகின் மிகச்சிறந்த வீரராக வருவாரு – கவாஸ்கர் புகழாரம்

Gavaskar
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ள நிலையில் இன்று இரண்டாவது அரையிறுதி ஆட்டமாக பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் பலபரிட்சை நடத்தும்.

INDvsPAK

- Advertisement -

இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 5 போட்டிகளில் விளையாடி 264 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த பட்லருக்கு மிக நெருக்கத்தில் இருக்கும் பாபர் அசாம் இன்றைய போட்டியில் அவரது ரன்களையும் கடந்து இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக மாறுவார். இதுவரை இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம் 4 அரை சதங்களை இந்த தொடரில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாமை புகழ்ந்து தற்போது சுனில் கவாஸ்கர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள பாபர் அசாம் தயாராக இருக்கிறார். பாகிஸ்தான் அணியின் தற்போதைய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக இவரே இருக்கிறார். அவர் அணியை வழி நடத்தும் விதம் மிகவும் நிதானமாகவும், அதே நேரத்தில் சரியான வகையிலும் உள்ளது.

Azam

அவர் தனது அணியை ஊக்கப்படுத்தும் விதம் அவரது அணியை வெற்றியை நோக்கி கொண்டுசெல்கிறது. நிச்சயம் தொடர்ந்து இதே போன்ற ஆட்டத்தை சரியான உடல் தகுதியுடன் பாபர் அசாம் தொடர்ந்து விளையாடினால் நிச்சயம் அவர் கிரிக்கெட்டில் ஒரு ஆல்டைம் கிரேட் பேட்ஸ்மேனாக மாறுவார். அதோடு மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அவர் தனது ஆதிக்கத்தை தற்போது செலுத்தி வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனியின் சி.எஸ்.கே கேப்டன் பதவியை குறிவைத்துள்ள இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் – தோனிக்கு பதில் இவரா?

போட்டியின் சூழலுக்கு ஏற்ப திறமையாக விளையாடும் அவர் கேப்டன்சியிலும் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். நிச்சயம் பாகிஸ்தான் அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவராகவும் பாபர் அசாம் இனிவரும் காலங்களில் திகழ்வார். அவரின் தலைமையிலான இந்த பாகிஸ்தான் அணி பெரும் பலம் வாய்ந்த அணியாக உள்ளதால் இந்த அரையிறுதிப் போட்டியில் அவர்கள் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தவும் அதிக வாய்ப்புள்ளது என்று கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement