தோனியின் சி.எஸ்.கே கேப்டன் பதவியை குறிவைத்துள்ள இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் – தோனிக்கு பதில் இவரா?

Samson
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14-ஆவது ஐபிஎல் தொடரை தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 4-வது முறையாக கைப்பற்றி அசத்தியது. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது முதல் அணியாக பிளே ஆப் சுற்றின் வாய்ப்பை இழந்து வெளியேறிய சென்னை அணியானது இந்த ஆண்டு மீண்டும் பலமான அணியாக திரும்பி கோப்பையை கைப்பற்றியுள்ளது. அடுத்ததாக 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் 2 புதிய அணிகள் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாடும் என்று கூறப்பட்டது.

Dhoni-3

- Advertisement -

அந்த வகையில் துபாயில் அண்மையில் நடைபெற்ற ஏலத்தின் மூலம் புதிய 2 அணிகள் உறுதி செய்யப்பட்டது. இதற்கடுத்து வரும் 2022 ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அணிகளின் வீரர்கள் கலைக்கப்பட உள்ளதால் பல்வேறு அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கும் வீரர் குறித்த பட்டியலை ஆலோசித்து வருகிறது.

மேலும் சென்னை அணியின் கேப்டன் தோனி தற்போது 40 வயதை கடந்து விட்டதால் இனி வருங்காலத்தை கணக்கில் கொண்டு அணியை வழிநடத்திச் செல்ல ஒரு வீரரை எதிர்நோக்கியுள்ளார். இந்த ஆண்டு அவர் விளையாடினாலும் நிச்சயம் சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Samson

இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக தற்போது விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியில் விளையாட ஆர்வமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. ஏனெனில் சமூக வலைதளப் பக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை “அன் பாலோ” செய்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியின் பக்கத்தை ஃபாலோ செய்து வருகிறார். இதன் காரணமாக அவர் சென்னை அணியில் விளையாட விரும்புவதாக தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இதுக்கு மேலயும் இவர் என்னதான் பண்ணனும். இவருக்கு ஏன் சேன்ஸ்ஸே கொடுக்கமாட்றீங்க – ஹர்பஜன் அதிருப்தி

மேலும் தோனிக்கு பின் அணியை அடுத்த பத்தாண்டுகளுக்கு விக்கெட் கீப்பர் கேப்டனாக அவரால் கொண்டு செல்ல முடியும் என்கிற காரணத்தினால் தற்போது தோனியின் இடத்தை சாம்சன் குறி வைத்துள்ளார் என்று தோன்றுகிறது. நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் 14 போட்டிகளில் 40 ரன்கள் சராசரியுடன் 484 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement