இதுக்கு மேலயும் இவர் என்னதான் பண்ணனும். இவருக்கு ஏன் சேன்ஸ்ஸே கொடுக்கமாட்றீங்க – ஹர்பஜன் அதிருப்தி

Harbhajan

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 12-சுற்றோடு இந்திய அணி வெளியேறியுள்ளது. அடுத்ததாக நவம்பர் 17-ஆம் தேதி நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மொத்தம் 16 வீரர்களை கொண்ட அணியாக வெளியிடப்பட்டுள்ளது.

Rohith

இந்த தொடருக்கான இந்திய அணியில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் வீரர் ஒருவருக்கு இன்னும் ஏன் வாய்ப்பு வழங்கவில்லை ? என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் :

- Advertisement -

2018-19 ஆம் ஆண்டு ரஞ்சி தொடரில் 854 ரன்கள் மற்றும் 2019-20 ஆண்டு தொடரில் 809 ரன்கள் என தொடர்ச்சியாக ரன்களை குவித்து இந்த வருடமும் சிறப்பாக செயல்பட்டு வரும் செல்டன் ஜாக்சனை ஏன் அணியில் இன்னும் தேர்வு செய்யவில்லை ? என்று தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கு எதிராக தனது காட்டமான கேள்வியை வெளிப்படுத்தியுள்ளார். 35 வயதான செல்டன் ஜாக்சன் சிறப்பான பார்மில் இருந்தும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதை ஹர்பஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நியூசிலாந்து தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை என்றாலும் தென்னாப்பிரிக்க செல்லும் இந்திய ஏ அணியில் கூட அவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று ஹர்பாஜன் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்வு குழுவினரின் செயல்பாடு மோசமான ஒன்றாக இருப்பதாகவும் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக விளையாடி வரும் ஒரு வீரரை தேர்வு செய்யாமல் இருப்பது வெட்கமாக இருக்கிறது என்றும் தனது கருத்தை அவர் பகிர்ந்துள்ள குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : நான் இந்திய அணியில் தேர்வானது இவர் சொல்லித்தான் எனக்கு தெரியும் – வெங்கடேஷ் ஐயர் பேட்டி

தற்போது நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி தொடரில் கூட செல்டன் ஜாக்சன் 3 அரைச் சதங்களுடன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை பர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் 5600-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ள அவருக்கு இதுவரை இந்திய அணியில் இடம் கிடைக்காதது வருத்தம் அளிப்பதாகவும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement