நான் இந்திய அணியில் தேர்வானது இவர் சொல்லித்தான் எனக்கு தெரியும் – வெங்கடேஷ் ஐயர் பேட்டி

Venkatesh
- Advertisement -

கொல்கத்தா அணிக்காக கடந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக விளையாட இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட 16 பேர் கொண்ட இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயருக்கு அறிமுக வாய்ப்பினை பிசிசிஐ வழங்கியுள்ளது. நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 370 ரன்களை குவித்துள்ளார். 41 ரன்கள் சராசரியுடன் விளையாடிய அவர் 37 பவுண்டரி மற்றும் 14 சிக்ஸர்களை விளாசி உள்ளார்.

venkatesh iyer

- Advertisement -

அதுமட்டுமின்றி அந்த தொடரில் 8.3 ஓவர்கள் வீசியுள்ள அவர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இப்படி ஒரு ஆல்-ரவுண்டராக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் இந்திய அணிக்காக தற்போது தேர்வாகியுள்ளது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தற்போது மத்திய பிரதேச அணிக்காக நான் சையது முஷ்டாக் அலி கோப்பையில் பங்கேற்று விளையாடி வருகிறேன். இந்த தொடரின் கேரளா அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு எனது அறையின் கதவைத் தட்டிய சக வீரர் ஆவேஷ் கான் சிரித்துக்கொண்டே “Congratulations Bhai” என்று தெரிவித்தார்.

பிறகு இந்திய அணியில் நாம் தேர்வாகியுள்ளோம் என்று என்னை கட்டி அனைத்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 16 பேர் கொண்ட பட்டியலில் ரோகித் சர்மாவின் தலைமையில் கீழ் நாம் இருவரும் விளையாட தேர்வாகியுள்ளோம் என்றும் என்னிடம் அவரே தெரிவித்தார். அப்போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

avesh

என்னுடைய கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாக இதனை நான் கருதுகிறேன். இந்திய அணியின் ஜெர்சி அணிந்து விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவு அந்த வகையில் தற்போது என்னுடைய கனவு நினைவாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி என்று வெங்கடேஷ் ஐயர் குறிப்பிட்டார். மேலும் தன்னை தேர்வு செய்த தேர்வு குழுவினர், அணியின் கேப்டன் மற்றும் சீனியர் வீரர்கள் அனைவருக்கும் தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியில் முடிவுக்கு வருகிறதா ஹார்டிக் பாண்டியாவின் இடம் ? – பி.சி.சி.ஐ போட்டுள்ள ஸ்கெட்ச்

ஒரு ஆல்-ரவுண்டராக இந்திய அணி என்னிடம் என்ன எதிர்பார்க்கிறதோ அதனை பூர்த்தி செய்ய தான் ஆவலுடன் காத்திருப்பதாகவும், இந்திய அணிக்காக ரன்களை குவிக்க விருப்பப்படுவதாகும் வெங்கடேஷ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement