இந்திய அணியில் முடிவுக்கு வருகிறதா ஹார்டிக் பாண்டியாவின் இடம் ? – பி.சி.சி.ஐ போட்டுள்ள ஸ்கெட்ச்

Pandya-5

இந்திய அணியின் இளம் முன்னணி ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி தற்போது வரை விளையாடி வருகிறார். பேட்டிங்கில் அதிரடி காண்பிக்க கூடிய பாண்டியா பந்துவீச்சிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர் என்பதன் காரணமாக தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடித்து வருகிறார். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட காயம் காரணமாக முதுகுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் தொடர்ந்து பந்து வீசாமல் இருந்துவருகிறார். அது மட்டுமின்றி அடிக்கடி காயத்திலும் சிக்கும் பாண்டியா முன்பு போல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்.

pandya

உலககோப்பை தொடரிலும் பேட்டிங்கில் அவர் சொதப்பியுள்ளார். அதுமட்டுமின்றி ஐ.பி.எல் தொடரில் பந்துவீசாத அவர் உலகக்கோப்பை தொடரில் பந்து வீசுவார் என்று கூறப்பட்டது. ஆனால் உலக கோப்பை தொடரிலும் பந்து வீசாமல் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வந்த ஹார்டிக் பாண்டியா தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள வேளையில் பாண்டியா குறித்து பிசிசிஐ எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

- Advertisement -

மேலும் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றே தெரிகிறது. ஏனெனில் தற்போது பார்மை இழந்து தவித்து வரும் பாண்டியாவை இனியும் அணியில் வைத்திருக்கக் கூடாது என்பதற்காக அடுத்த ஆல்ரவுண்டருக்கான தேடலில் பிசிசிஐ மறைமுகமாக தற்போது தங்களது கவனத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில் கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயரை அடுத்த வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக உருவாக்கவே தற்போது நியூசிலாந்து தொடருக்கான அணியில் இடம் கொடுத்துள்ளனர்.

pandya

ஒருவேளை வெங்கடேஷ் ஐயர் இந்த நியூசிலாந்து தொடரில் ஆல்-ரவுண்டராக சிறப்பாக செயல்படும் பட்சத்தில் பாண்டியாவின் இடத்தினை தட்டிப்பறிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதே வேளையில் பாண்டியா மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டுமெனில் இனி வரும் போட்டிகளில் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மட்டுமின்றி பந்து வீச்சிலும் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 பேட்ஸ்மேன் ரேங்கிங்கில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துள்ள விராட் கோலி – எந்த இடம் தெரியுமா ?

இதன் காரணமாக கிட்டத்தட்ட தற்போது பாண்டியாவின் இடம் முடிவுக்கு வந்துள்ளது என்றே கூறலாம். மேலும் அவர் ஆல்-ரவுண்டராக இல்லாத பட்சத்தில் அணியில் மீண்டும் இடம் பிடிப்பது கடினம் என்று தெரிகிறது. பாண்டியாவின் இடத்தில் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கடேஷ் ஐயர் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட தான் ஆர்வமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement