- Advertisement -
உலக கிரிக்கெட்

அவருக்கு காட்டுத்தனமா பந்தை எறியத்தான் தெரியும் – பாகிஸ்தான் பவுலர் குறித்து மனம்திறந்த சேவாக்

இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் இந்திய அணிக்காக கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை விளையாடி உள்ளார். இந்திய அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ள சேவாக் 104 டெஸ்ட் போட்டிகள், 251 ஒருநாள் போட்டிகள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 17,000 ரன்களுக்கு மேல் அடித்துள்ள சேவக் டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி, டி20 போட்டி என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் ஒரே மாதிரியான பேட்டிங்கை கையாண்டவர்.

அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக் விளையாடும் வேகத்திற்க்கே ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது பிரமாதமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக மட்டும் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1276 ரன்களை அடித்துள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம், இரட்டை சதம் மற்றும் முச்சதம் என அவர் அடித்து பிரமாதப் படுத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக களமிறங்கி அதிரடி காட்டும் இவருக்கு அப்போது மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருந்தது என்று கூறலாம். அந்த அளவிற்கு உலகின் பல முன்னணி பவுலர்களை அவர் தனது அதிரடியால் கலங்கவிட்டார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தான் விளையாடியபோது அக்தரின் பந்துவீச்சை எதிர் கொண்டது குறித்து அவர் தற்போது பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : அக்தர் பந்துவீசும் போது தனது முழங்கையை ஆட்டுவார் என்றும் காட்டுத்தனமான பந்துகளை எறிவார் என்றும் கூறியுள்ளார். மேலும் அவருக்கு எதிராக இரண்டு பந்துகளை பவுண்டரி அடித்து விட்டால் அடுத்த பந்தை பீமர் அல்லது யார்க்கராக எறிவார் என்றும் சேவாக் கூறியுள்ளார்.

- Advertisement -

அதேபோன்று அக்தர் தனது முழங்கையை அசைப்பதை நன்கு அறிவார். இருப்பினும் அவர் எப்போதுமே காட்டுத்தனமாக பந்து வீசி எறியவே துடிக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். ஐசிசி அவரை தடை செய்யவும் இதுதான் காரணம். பிரட் லீ போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கை நேராக கீழே வரும். அதனால் அவர்களது பந்தினை எளிதாக கணிக்க முடியும்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : தோனி முழு கேப்டனா இருந்திருந்தாலும் சிஎஸ்கே பிளே ஆஃப் போயிருக்காது – முன்னாள் வீரர் கருத்து

ஆனால் அக்தரின் பந்து எங்கிருந்து வருகிறது என்பதை உங்களால் யூகிக்க முடியாது. எனவே நான் எந்த பவுலர் பந்து வீசும்போதும் அவர்களை எதிர்கொள்ள பயப்பட்டது கிடையாது. ஆனால் அக்தரின் பந்துவீச்சை எதிர்கொள்வது கடினம் என்று சேவாக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by