- Advertisement -
ஐ.பி.எல்

2 ஓவருடன் மைதானத்தில் இருந்து வெளியேறிய மதீஷா பதிரானா? என்ன ஆனது? – அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46-வது லீக் போட்டியில் விளையாடிய சிஎஸ்கே அணியானது 78 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி ஏற்கனவே அந்த அணிக்கு எதிராக சந்தித்த தோல்விக்கு பழி தீர்த்ததோடு தற்போது புள்ளி பட்டியிலிலும் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 212 ரன்களை குவித்தது.

- Advertisement -

சிஎஸ்கே அணி சார்பாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிகபட்சமாக 98 ரன்களை குவித்து அசத்தினார். அதனை தொடர்ந்து 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி துவக்கத்தில் அதிரடியாக ஆரம்பித்திருந்தாலும் பின்னால் சிஎஸ்கே அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களை மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா 2 ஓவர்கள் பந்துவீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

இந்த போட்டியின் 11-வது ஓவரை வீசிய பதிரானா அதன் பின்னர் 16-வது ஓவரை வீசினார். பின்னர் 18-வது மற்றும் 20-தாவது ஓவரை வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மைதானத்திலிருந்து பிசியோதெரபி உதவியுடன் அவர் வெளியேறினார். பின்னர் மீண்டும் இறுதி கட்ட ஓவர்களை வீச அவர் மைதானத்திற்கு திரும்பவே இல்லை. இதன் காரணமாக பதிரானவுக்கு என்ன ஆனது? என்பது குறித்த குழப்பமும் ரசிகர்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மும்பையை முந்திய ஆர்சிபி சேசிங்கில் புதிய சாதனை.. தவானை பின்னுக்குத் தள்ளிய கிங் கோலி.. 2 சாதனை

அந்த வகையில் வெளியான தகவலின் படி : பதிரனாவிற்கு தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதாலேயே இந்த போட்டியின் பாதியிலேயே அவர் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது தீவிர காயம் அடைய வாய்ப்பு இல்லை என்பதனால் அடுத்த போட்டியில் அவர் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அவருக்கு காயம் ஏற்பட்டு அவரால் விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் அது சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.

- Advertisement -