- Advertisement -
ஐ.பி.எல்

2008இல் அந்த ஐபிஎல் அணிக்கு நான் வெறித்தனமான சிஎஸ்கே ரசிகன்.. இப்போவும் பிடிக்கும்.. குல்தீப் பேட்டி

கோடைகாலத்தில் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இந்திய ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அதில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து 10 அணிகளும் போராடி வருகின்றன. முன்னதாக ஐபிஎல் தொடரில் தற்போது 10 அணிகள் இருந்தாலும் மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கே அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். இதில் கோப்பையை வெல்லாவிட்டாலும் பெங்களூரு அணிக்காக ஒரு தரப்பு ரசிகர்கள் விஸ்வாசத்துடன் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

ஆனால் மும்பை மற்றும் சென்னை அணிகள் தலா 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகளாக சாதனை படைத்துள்ளன. எனவே அதற்கு நிகராக இந்தியா முழுவதும் மும்பை மற்றும் சென்னை அணிக்கு கோடி கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அதில் தென்மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரை மையப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வட மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

- Advertisement -

வெறித்தனமான ரசிகன்:
ஏனெனில் அந்த அணிக்கு 2011 உலகக் கோப்பையை இந்தியாவுக்காக வென்று கொடுத்த மகத்தான ஜாம்பவான் வீரர் எம்எஸ் தோனி 2008 – 2023 கேப்டனாக செயல்பட்டு 5 சாம்பியன் பட்டங்களை வென்று கொடுத்துள்ளார். இந்நிலையில் ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 காலகட்டங்களில் தாம் சிஎஸ்கே அணியின் வெறித்தனமான ரசிகராக இருந்ததாக உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தோனி, ஹெடன், முரளிதரன் போன்ற ஜாம்பவான்கள் இருந்ததால் சென்னை அணி தமக்கு மிகவும் பிடித்ததாக குல்தீப் தெரிவித்துள்ளார். இது பற்றி ரவிச்சந்திரன் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “ஐபிஎல் துவங்கப்பட்ட போது நான் சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய ரசிகன். எம்எஸ் தோனி, மேத்யூ ஹைடன் போன்றவர்களுடன் நல்ல அணியாக இருந்ததால் நான் சிஎஸ்கே அணிக்கு வெறித்தனமான ரசிகனாக இருந்தேன்”

- Advertisement -

“இப்போதும் நான் சென்னையின் ரசிகனாகவே இருக்கிறேன். வேறு அணிக்காக விளையாடுவதால் அது மாறிவிடும் என்று அர்த்தமல்ல. இளம் வீரராக இருந்த அந்த காலகட்டங்களில் யாராவது உனக்கு மிகவும் பிடித்த ஐபிஎல் அணி எது என்று சொன்னால் அது சிஎஸ்கே அணியாக இருக்கும். இருப்பினும் அண்டர்-19 அளவில் விளையாடிய பின் நான் 2012ஆம் ஆண்டு மும்பை அணிக்காக தேர்வு செய்யப்பட்டேன்”

இதையும் படிங்க: உலகக் கோப்பை வெல்ல மாஸ்டர் பிளான்.. இந்தியாவின் முன்னாள் கோச், ஆஸி லெஜெண்டை தூக்கிய பாகிஸ்தான்

“அதற்கு முன்பு வரை நான் சிஎஸ்கே அணிக்காக மட்டுமே ஐபிஎல் தொடரை பார்ப்பேன். ஆனால் மும்பை அணிக்காக தேர்வு செய்யப்பட்ட பின் இனிமேல் மும்பை அணிக்கு நகரலாம் என்று நினைத்தேன்” எனக் கூறினார். முன்னதாக சர்வதேச அளவில் இந்தியவுக்காக தாம் சிறந்து விளங்குவதற்கு எம்எஸ் தோனி முக்கிய காரணமாக இருந்ததாக பலமுறை குல்தீப் யாதவ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -