- Advertisement -
உலக கிரிக்கெட்

உலகக் கோப்பை வெல்ல மாஸ்டர் பிளான்.. இந்தியாவின் முன்னாள் கோச், ஆஸி லெஜெண்டை தூக்கிய பாகிஸ்தான்

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் விரைவில் நடைபெற உள்ளது. அந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக பாபர் அசாமை மீண்டும் பாகிஸ்தான் வாரியம் தங்களுடைய கேப்டனாக அறிவித்துள்ளது. கடந்த வருடம் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் இந்தியாவிடம் அவமான தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் நாக் அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

அந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்ற பாபர் அஸாம் அனைத்து விதமான கேப்டன்ஷிப் பொறுப்புகளையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து சாகின் அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய டி20 கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அவருடைய தலைமையில் நியூசிலாந்து மண்ணில் 4 – 1 (5) என்ற கணத்தில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

மாஸ்டர் பிளான்:
அதனால் உடனடியாக சாகின் அஃப்ரிடியை கழற்றி விட்ட பாகிஸ்தான் வாரியம் பாபர் அசாமை மீண்டும் கேப்டனாக அறிவித்தது. ஆனால் அவருடைய தலைமையில் சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் திணறலாக விளையாடிய பாகிஸ்தான் 2 – 2 என்ற கணக்கில் கோப்பையை பகிர்ந்து கொண்டது.

இத்தனைக்கும் கேன் வில்லியம்சன் போன்ற நட்சத்திர வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடினர். அதனால் மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையில் இளம் வீரர்களுடன் கூடிய நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் எதிர்கொண்டது. ஆனால் அப்படிப்பட்ட கத்துக்குட்டி நியூசிலாந்து அணியை கூட தோற்கடிக்க முடியாத பாகிஸ்தான் போராடி தொடரை சமன் செய்தது.

- Advertisement -

இந்நிலையில் 2024 உலகக் கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தான் வெள்ளைப்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்படுவதாக அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது. 101 டெஸ்ட், 185 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட அவர் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்ட பெருமைக்குரியவர்.

இதையும் படிங்க: 2 ஓவருடன் மைதானத்தில் இருந்து வெளியேறிய மதீஷா பதிரானா? என்ன ஆனது? – அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

எனவே அவரை தற்போது தங்களுடைய அணியின் புதிய பயிற்சியாளராக நியமித்து டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக பாகிஸ்தான் வாரியம் மாஸ்டர் பிளானை கையில் எடுத்துள்ளது. இது மட்டுமல்லாமல் நட்சத்திர முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் கில்லஸ்ப்பி பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவதாகவும் அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அந்த வகையில் 2 தரமான முன்னாள் வீரர்கள் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது பாகிஸ்தான் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -