ஐபிஎல் 2022 : தோனி முழு கேப்டனா இருந்திருந்தாலும் சிஎஸ்கே பிளே ஆஃப் போயிருக்காது – முன்னாள் வீரர் கருத்து

CSK Ms DHoni
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக கோப்பையை சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஆரம்பத்திலேயே 14 கோடிக்கு வாங்கப்பட்ட தீபக் சஹர் காயத்தால் விலகியது பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் அதைவிட தொடர் துவங்க ஒருசில நாட்கள் முன்பாக எம்எஸ் தோனி கேப்டன்ஷிப் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. ஏனெனில் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத அவர் தலைமையில் முதல் 4 போட்டிகளில் வரிசையாக தோற்ற சென்னையின் ப்ளே ஆப் வாய்ப்பு அப்போதே பாதி பறிபோனது.

CSK MS Dhoni Ravindra Jadeja

- Advertisement -

அத்துடன் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பொறுப்பு பேட்டிங் பவுலிங் என மொத்தமாக தனது ஆட்டத்தை பாதித்ததாக உணர்ந்த ஜடேஜா அந்த பொறுப்பே வேண்டாம் என்று மீண்டும் தோனியிடமே அதை வழங்கிய அடுத்த போட்டியில் காயமடைந்து மொத்தமாக வெளியேறிவிட்டார். அந்த நேரத்தில் பரம எதிரியான மும்பைக்கு எதிரான முக்கிய போட்டியில் 97 ரன்களுக்கு சுருண்ட சென்னை 2020க்கு பின் வரலாற்றில் 2-வது முறையாக மீண்டும் பிளே-ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் அதிகாரபூர்வமாக வெளியேறியது.

தோனி இருந்திருந்தால்:
தற்போதைய நிலைமையில் பங்கேற்ற 13 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 9 தோல்விகளையும் செய்துள்ள அந்த அணி 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சீசனில் 9 தோல்விகளை பதிவு செய்து பரிதாப சாதனை படைத்துள்ள சென்னை குறைந்தது கடைசி போட்டியில் வென்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பதையாவது தவிர்க்குமா என அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

MI vs CSK Ms Dhoni Rohit Sharma

முன்னதாக 2008 – 2021 வரை காலம் காலமாக தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக 12 சீசன்களில் 11 முறை பிளே-ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்று 9 முறை இறுதிப் போட்டிகளில் விளையாட வைத்து 4 சாம்பியன் பட்டங்களை வென்று கொடுத்த எம்எஸ் தோனி சென்னை 2-வது வெற்றிகரமான அணியாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்கிறார். அப்படிப்பட்ட அவர் ஒருவேளை இந்த வருடம் ஆரம்பம் முதலே கேப்டன்ஷிப் செய்திருந்தால் சென்னை நிச்சயம் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும் என்று வீரேந்திர சேவாக் உட்பட பல முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.

- Advertisement -

ஒன்னும் நடந்திருக்காது:
இருப்பினும் ஆரம்பம் முதலே தோனி கேப்டனாக இருந்திருந்தாலும் சென்னை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்க முடியாது என்று முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தோனி ஆரம்பம் முதலே கேப்டனாக இருந்திருந்தால் கண்டிப்பாக அது சென்னைக்கு மிகப் பெரிய பயனாக இருந்திருக்கும். மேலும் புள்ளிப் பட்டியலில் கடைசி இடங்களில் திண்டாடமல் மேல் பகுதியில் இருக்கும். ஆனாலும் அவர்களால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்க முடியாது. ஏனெனில் அவர்களிடம் நல்ல அணி கிடையாது. அவர்களிடம் பந்துவீச்சு வலுவாக இல்லை. குறிப்பாக விக்கெட்களை எடுக்கக்கூடிய பவுலரான தீபக் சஹார் காயத்தால் விலகினார். அத்துடன் அவர்களது பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடவில்லை” என்று கூறினார்.

Harbhajan

அவர் கூறுவது ஒருவகையில் சரி என்றாலும் அதே தீபக் சஹர் இல்லாமல் சுமாரான பேட்டிங் பவுலிங்கை வைத்துக்கொண்டு ஜடேஜா தலைமையில் முதல் 8 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற சென்னை தோனி தலைமையில் 5 போட்டிகளிலேயே 2 வெற்றிகளை பெற்றுள்ளது. எனவே ஆரம்பம் முதல் தோனி கேப்டனாக இருந்திருந்தால் ஒருவேளை சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றிருக்கும் என்று கூறுவதில் தவறில்லை.

- Advertisement -

சொந்த மண் சாதகம்:
ஆனாலும் தோனி இருந்திருந்தாலும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்க முடியாது எனக் கூறும் ஹர்பஜன் சிங் தீராவது 9-வது இடத்தில் திண்டாடமல் 5, 6 போன்ற இடங்களை மட்டுமே பிடித்திருக்க முடியும் என்று கூறினார். மேலும் இந்த தொடர் மும்பையில் நடைபெறுவதால் சென்னையின் சொந்த மண் மற்றும் கோட்டையான சேப்பாக்கத்தில் அந்த அணியால் விளையாட முடியாமல் போனதும் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

CSK-1

அது பற்றி ஹர்பஜன் சிங் பேசியது பின்வருமாறு. “அது நிச்சயமாக ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கும். அங்கு (சேப்பாக்கம்) விளையாடியிருந்தால் இதே சுமாரான அணியை வைத்துக் கொண்டும் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும். ஏனெனில் சொந்த மண்ணில் விளையாடும்போது அவர்கள் வித்தியாசமாக சிறப்பாக விளையாடுவார்கள். டெல்லி, மும்பை போன்ற அணிகள் கூட சொந்த மண்ணில் விளையாடும்போது வலுவானதாக காட்சியளிக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : மும்பை மாஸ் டீம், நிச்சயம் ஜெயிப்பாங்க ! திடீர் பாசமழை பொழியும் ஆர்சிபி ரசிகர்கள் – காரணம் இதோ

இருப்பினும் இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் மட்டும் சொந்த மண்ணில் விளையாடினாலும் 10 தோல்விகளை பதிவு செய்து கடைசி இடத்தில் திண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement