மும்பை மாஸ் டீம், நிச்சயம் ஜெயிப்பாங்க ! திடீர் பாசமழை பொழியும் ஆர்சிபி ரசிகர்கள் – காரணம் இதோ

RCB vs MI Rohit Sharma
- Advertisement -

கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக மும்பை நகரில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் உச்ச கட்டத்தை எட்டியுள்ளன. இதில் பிளே ஆப் சுற்றில் விளையாடும் 4 அணிகளை தீர்மானிக்கும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆரம்பத்திலேயே தொடர் தோல்விகளை சந்தித்த மும்பையும் சென்னையும் முதல் 2 அணிகளாக ஏற்கனவே லீக் சுற்றுடன் அதிகாரபூர்வமாக வெளியேறிவிட்டன.

gt

- Advertisement -

எனவே புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்கு எஞ்சிய 8 அணிகளிடையே கடும் போட்டி நிலவிய நிலையில் 13 போட்டிகளில் 10 வெற்றிகளுடன் 20 புள்ளிகளைப் பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் முதலிடம் பிடித்து முதல் அணியாக நாக்அவுட் சுற்றுக்கு அதிகாரபூர்வமாக தகுதி பெற்றுவிட்டது. அதனால் எஞ்சிய 3 இடங்களுக்கு எஞ்சிய 7 அணிகள் கடும் போட்டி போடுகின்றன. அதில் தலா 16 புள்ளிகளுடன் 2 மற்றும் 3 ஆகிய இடங்களில் உள்ள ராஜஸ்தான் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் தங்களது கடைசி போட்டியில் தோற்றாலும் கூட பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கு 90% அதிக வாய்ப்புள்ளது.

பரபரக்கும் லீக் சுற்று:
1. ஏனெனில் மே 18-ஆம் நடைபெறும் 66-வது லீக் போட்டியில் 12 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கும் கொல்கத்தாவிடம் தனது கடைசி போட்டியில் 16 புள்ளிகளை பெற்றுள்ள லக்னோ தோற்றாலும் 3-வது இடத்தில் தான் நீடிக்கும்.

LSG vs RR

2. அதேபோல் 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் தனது கடைசி போட்டியில் 9-வது இடத்தில் திணறும் சென்னையிடம் தோற்றாலும் 2-வது இடத்தில் தான் இருக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் 6, 7, 8 ஆகிய இடங்களில் தலா 13 போட்டிகளில் தலா 6 வெற்றிகளுடன் தலா 12 புள்ளிகளைப் பெற்றுள்ள கொல்கத்தா, பஞ்சாப், ஐதராபாத் ஆகிய அணிகள் தங்களது கடைசி போட்டியில் வென்றாலும் 4, 5 ஆகிய இடங்களில் தலா 13 போட்டிகளில் தலா 14 புள்ளிகளைப் பெற்றுள்ள டெல்லி மற்றும் பெங்களூருவை முந்த முடியாது.

PBKS vs SRH

1. இந்த 6, 7, 8 ஆகிய இடங்களில் இருக்கும் 3 அணிகளில் 6-வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா மே 18-ஆம் தேதி லக்னோவை எதிர்கொண்டு தோல்வியடைந்தால் அதோடு வெளியேறிவிடும். ஒருவேளை அதில் வென்றாலும் மே 21-ஆம் நடைபெறும் மும்பை – டெல்லி மோதும் போட்டியில் டெல்லி தோற்கவேண்டும் மும்பையின் வெற்றி பெறவேண்டும் என்ற நிலைமைக்காக காத்திருக்க வேண்டும்.

- Advertisement -

2. மேலும் 7, 8 ஆகிய இடங்களில் உள்ள ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் 22-ஆம் தேதி மோதுப்போது தோல்வியடையும் அணி அதோடு வெளியேறிவிடும். மேலும் வெற்றி பெறும் அணிக்கும் கூட அதற்கு முந்தைய நாளான மே 21-ஆம் தேதி நடைபெறும 69-வது போட்டியில் டெல்லியை மும்பை தோற்கடித்திருந்தால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு நீடித்திருக்கும்.

rcbvsdc

மும்பைக்கு ஆர்சிபி சப்போர்ட்:
1. மேற்குறிப்பிட்ட 3 அணிகளை விட 4 மற்றும் 5-வது இடத்தில் தலா 14 புள்ளிகளுடன் சமஅளவில் இருக்கும் டெல்லி – பெங்களூரு ஆகிய அணிகளுக்கு தான் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இதில் +0.255 ரன்ரேட் கொண்டுள்ள டெல்லி தனது கடைசி போட்டியில் மும்பையை தோற்கடித்தாலே எந்தவித சிரமமும் இல்லாமல் பிளே-ஆப் சுற்றுக்கு சென்று விடலாம்.

- Advertisement -

2. ஆனால் -0.323 என்ற சுமாரான ரன்ரேட் கொண்டுள்ள பெங்களூரு குஜராத்துக்கு எதிராக நாளை மே 19இல் நடைபெறும் தனது கடைசி போட்டியில் வென்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கடினம். ஏனெனில் டெல்லியை விட குறைவான ரன்ரேட் பெற்றுள்ள அந்த அணி குஜராத்துக்கு எதிரான போட்டியில் குறைந்தது 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலும் 15 ஓவர்களுக்குள் சேஸிங் செய்து வென்றாலும் மும்பையை டெல்லி தோற்கடித்து விட்டால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாது.

3. மொத்தத்தில் மே 29-ஆம் தேதி நடைபெறும் டெல்லி – மும்பை அணிகள் மோதும் போட்டியில் மும்பை வெற்றி பெற வேண்டும் என்ற முடிவுக்காக பெங்களூரு, ஹைதெராபாத், பஞ்சாப், கொல்கத்தா (லக்னோவுக்கு எதிராக வென்றால்) ஆகிய 4 அணிகள் காத்திருக்கின்றன.

4. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் டெல்லியை மும்பை தோற்கடித்தால் பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்கு செல்ல 100% வாய்ப்புள்ளது. எஞ்சிய ஹைதெராபாத், பஞ்சாப் போன்ற அணிகள் அதோடு வெளியேறிவிடும்.

5. எனவே என்னதான் 8 தொடர் தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும் வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள மும்பை நிச்சயமாக தனது கடைசி போட்டியில் டெல்லியை தோற்கடிக்கும் என்று ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மும்பை மீது திடீர் பாசமழை பொழிந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : போராடி தோல்வி, வரலாற்றில் எப்போதும் நடந்திராத மும்பையின் சோகம் ! கண் கலங்கிய சச்சின் மகள்

6. ஒருவேளை மும்பை டெல்லி தோற்கடித்தால் பெங்களூரு ரசிகர்களின் கனவு பறிபோய்விடும் என்பதுடன் டெல்லி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

Advertisement