போராடி தோல்வி, வரலாற்றில் எப்போதும் நடந்திராத மும்பையின் சோகம் ! கண் கலங்கிய சச்சின் மகள்

SAra Tendulkar
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரயைல் மே 17-ஆம் தேதி நடைபெற்ற 65-வது லீக் போட்டியில் ஏற்கனவே தொடர் தோல்விகளால் சுற்றுடன் வெளியேறிய மும்பையை ஹைதராபாத் எதிர்கொண்டது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஐதராபாத் 20 ஓவர்களில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 193/6 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மற்றொரு இளம் தொடக்க வீரர் பிரியம் கார்க் அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதியுடன் இணைந்து அதிரடியான ரன்களை சேர்த்தார்.

Rahul Tripati

- Advertisement -

2-வது விக்கெட்டுக்கு 78 விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் பிரியம் கார்க் 42 (26) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிக்கலஸ் பூரனுடன் கைகோர்த்த ராகுல் திரிபாதி 76 பார்ட்னர்ஷிப் அமைத்து 9 பவுண்டரி 3 சிக்சருடன் 76 (44) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் நிக்கோலஸ் பூரன் தனது பங்கிற்கு 38 (22) ரன்கள் எடுத்த போதிலும் கடைசி நேரத்தில் அபாரமாக பந்துவீசிய ரமந்தீப் சிங் 3 விக்கெட் எடுத்ததால் அந்த அணியால் 200 ரன்களை தொட முடியவில்லை.

போராடிய டேவிட்:
அதை தொடர்ந்து 194 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு பார்மின்றி தவிக்கும் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிசன் ஆகியோர் இந்த முறை அதிரடியாக பேட்டிங் செய்து முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் சிறப்பான அடித்தளமிட்டனர். 11 ஓவர்கள் வரை அசத்திய இந்த ஜோடியில் 48 (36) ரன்களில் ரோகித் சர்மா அவுட்டாக அடுத்த ஓவரில் இஷான் கிசான் 43 (24) ரன்களில் அவுட்டானார். ஆனால் நடுவரிசையில் வந்த டானியல் சாம்ஸ் 15 (11) திலக் வர்மா 8 (9) ட்ரிஷன் ஸ்டப்ஸ் 2 (2) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் திடீரென்று அந்த அணி சரிவை சந்தித்தது.

MI vs SRH Bhuvaneshwar Kumar TIm David

அந்த நேரத்தில் கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்ட போது களத்திலிருந்த டிம் டேவிட் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி நடராஜன் வீசிய 18-வது ஓவரில் 4 சிக்சர்களை பறக்க விட்டதால் மும்பையின் வெற்றி உறுதி என அனைவரும் நினைத்தனர். ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தில் 46 (18) ரன்கள் எடுத்து மிரட்டிய டிம் டேவிட் தேவையின்றி சிங்கிள் எடுக்க முயன்றபோது நடராஜன் ரன் அவுட் செய்ததால் போட்டி மீண்டும் ஐதராபாத் பக்கம் திரும்பியது.

- Advertisement -

அதை பயன்படுத்தி 19-வது ஓவரில் புவனேஸ்வர் குமார் 1 ரன் கூட கொடுக்காமல் அசத்தினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட போது ரமன்தீப் சிங் 2 சிக்சர்கள் விளாசிய போதிலும் 20 ஓவர்களில் 190/7 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை போராடி தோற்றது.

கலங்கிய சாரா:
அதனால் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்ற ஹைதராபாத் 13 போட்டிகளில் 6-வது வெற்றியை பதிவு செய்தாலும் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல 99% வாய்ப்பு குறைவாகவே காணப்படுகிறது. ஏற்கனவே தொடர் தோல்விகளை சந்தித்த ரணத்தில் இருக்கும் மும்பை ரசிகர்களுக்கு இந்த போட்டியில் வெற்றியின் விளிம்பு வரை வந்த போதிலும் இத்தனை தோல்விக்குப் பின்பும் ஆறுதல் வெற்றி கூட கிடைக்காமல் போனது மிகப்பெரிய அதிர்ச்சியாகவும் சோகமாகவும் அமைந்தது.

- Advertisement -

அதிலும் இந்த போட்டி மும்பையின் கோட்டையான வான்கடே மைதானத்தில் நடைபெற்றதால் அதை பார்க்க வந்திருந்த நிறைய மும்பை ரசிகர்களுக்கு இந்த கையில் கிடைத்தும் வாய்க்கு கிடைக்காத வெற்றி சோகமாக அமைந்தது. குறிப்பாக இப்போட்டியில் மும்பைக்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் நேரில் வந்து ஆதரவு கொடுத்தார். அந்த நிலையில் கடைசி நேர பரபரப்பில் டிம் டேவிட் 4 சிக்சர்களை பறக்க விட்ட போது மும்பை வெற்றி பெற்றுவிடும் என மகிழ்ச்சியுடன் புன்னகையாக காட்சியளித்த அவர் ரன் அவுட்டானபோது கண் கலங்கி சோகமடைந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின்றன.

இந்த தோல்வியால் பங்கேற்ற 13 போட்டிகளில் 10-வது தோல்வியை பதிவு செய்த மும்பை வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சீசனில் 10 தோல்விகளை பதிவு செய்த பரிதாபத்திற்கு உள்ளாகியது. அதைவிட வரலாற்றில் அந்த அணி இதுவரை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்ததே கிடையாது என்ற சூழ்நிலையில் தற்போது 9-வது இடத்தில் சென்னை 8 புள்ளிகளுடன் இருப்பதால் கடைசி போட்டியில் மும்பை வென்றாலும் ரன்ரேட் அடிப்படையில் 10-வது இடத்தைவிட்டு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சன் ரைசர்ஸ் அணியில் இருந்து வெளியேறிய கேன் வில்லியம்சன் – புதிய கேப்டன் யார் தெரியுமா?

இதனால் வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து மும்பை மீண்டும் ஒரு அவமான நிறைந்த பரிதாபத்தை சந்திக்க தயாராகியுள்ளது.

Advertisement