சன் ரைசர்ஸ் அணியில் இருந்து வெளியேறிய கேன் வில்லியம்சன் – புதிய கேப்டன் யார் தெரியுமா?

Williamson
- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னரின் தலைமையில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த சன் ரைசர்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக வில்லியம்சன் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் வில்லியம்சன் தலைமையில் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த சன் ரைசர்ஸ் அணியானது இதுவரை நடைபெற்றுள்ள 13 போட்டிகளில் ஆறு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

PBKS vs SRH

- Advertisement -

இனி அவர்கள் விளையாட இருக்கும் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது கடினம். இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தற்போது மீதமுள்ள ஒரு போட்டியில் இருந்து விலகி நியூசிலாந்து திரும்ப உள்ளதாக அந்த அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி வில்லியம்சனுக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதன் காரணமாக அவர் தனது மனைவியுடன் இருக்கவேண்டும் என்று கூறி அணியில் இருந்து வெளியேறி உள்ளார். இதன் காரணமாக எஞ்சியுள்ள ஒரு லீக் போட்டியில் வில்லியம்சன் விளையாட முடியாது. மேலும் சன்ரைசர்ஸ் அணி நிர்வாகமும் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் அவரை வாழ்த்தி வழி அனுப்பி உள்ளது.

williamson 1
Kane Williamson

அதில் அவர்கள் குறிப்பிட்டதாவது : எங்கள் கேப்டன் கேன் வில்லியம்சன் நியூசிலாந்து திரும்புகிறார். அவரது மனைவிக்கு நல்லபடியாக பிரசவம் நடக்கவும். வில்லியம்ஸ்சன் அவர்களது வாழ்க்கையில் அனைத்து மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக வில்லியம்சன் இந்த தொடரின் கடைசி போட்டியில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

அதேவேளையில் சன் ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது உள்ள தகவலின் படி இரண்டு வீரர்கள் அந்த அணியின் கேப்டன்சி போட்டிக்கு உள்ளனர். ஒன்று இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் மற்றொரு வீரர் பூரான் இவர்கள் இருவருக்கும் இடையே தான் கேப்டன்சி போட்டி இருக்கிறது.

இதையும் படிங்க : மீண்டும் போராடி தோற்ற மும்பை தோல்வி ! ஆனாலும் வேகத்தில் தங்கமாய் புதிய டி20 சாதனை படைத்த பும்ரா

நிச்சயம் இவர்கள் இருவரில் ஒருவர் தான் கடைசி போட்டியில் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக அணியை வழிநடத்திச் செல்வார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement