டி20 கிரிக்கெட்டிலிருந்து அவரை ஓரங்கட்டுனது முட்டாள் தனம் – இந்திய நிர்வாகத்தை விளாசிய சேவாக்

Sehwag
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ள வேளையில் தற்போது அனைத்து அணிகளுமே தங்களது அணியில் உள்ள வீரர்களை சரியாக வகைப்படுத்தி தங்களது அணிகளை பலப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையின் போது மோசமான தோல்விகளை எதிர்கொண்ட இந்திய அணியானது தற்போது இந்த ஆண்டு ரோஹித் சர்மா தலைமையில் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது.

Avesh-Khan

- Advertisement -

இதுவரை நடைபெற்று முடிந்த பல்வேறு தொடர்களில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்திய அணி முழுவதுமாக இன்னும் செட்டாகவில்லை என்ற விமர்சனங்களும் தற்போது அதிக அளவில் இருந்து வருகிறது.

குறிப்பாக பந்துவீச்சு துறையில் புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் என மூன்று பேரை மட்டுமே வைத்துக் கொண்டு ஆசிய கோப்பை தொடரை அணுகியது தவறு என்றும் இந்திய அணியில் சரியான பவுலர்களை இணைக்க வேண்டியது அவசியம் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் முகமது ஷமியை டி20 போட்டிகளில் இருந்து ஓரம் கட்டியது தவறு என இந்திய நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

shami

இந்திய அணி ஆசிய கோப்பை தொடருக்கு புவனேஸ்வர் குமார், ஆவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் என மூன்று பேருடன் மட்டுமே சென்றது மிகப்பெரிய தவறு. ஏனெனில் ஹர்ஷல் பட்டேல், பும்ரா போன்ற வீரர்கள் காயம் காரணமாக அணியில் இடம் பிடிக்காத போது அனுபவ வீரரான முகமது ஷமியை அவர்கள் தேர்வு செய்திருக்க வேண்டும். இந்திய அணிக்கு இளம் வீரர்கள் அவசியம்தான் அதை நான் மறுக்கவில்லை.

- Advertisement -

ஆனாலும் அதேவேளையில் எதிர்வரும் டி20 உலக கோப்பையில் அனுபவம் வாய்ந்த வீரர்களும் அவசியம். அந்த வகையில் ஷமி நிச்சயம் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு அவசியமான ஒரு வீரர். அனுபவ வீரரான அவர் அணிக்கு கைகொடுக்கும் ஒரு பவுலராக இருப்பார். என்னை பொறுத்தவரை டி20 கிரிக்கெட்டில் இருந்து ஷமியை ஓரம் கட்டியது இந்திய அணி எடுத்துள்ள தவறான முடிவாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அஷ்வினுக்கு இதே போல் நடந்தது.

இதையும் படிங்க : உங்க ஹனிமூன் நேரம் முடிந்துவிட்டது, இனிமே வேலையை பாருங்க – டிராவிடை விளாசும் முன்னாள் வீரர்

அதனை தொடர்ந்து தற்போது ஷமியை ஓரங்கட்டியுள்ளனர். ஆனால் இது இந்திய அணிக்கு சரியான முடிவு கிடையாது. என்னை பொறுத்தவரை ஷமி போன்ற சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் வாய்ந்த வீரரை உலகக்கோப்பை அணியில் விளையாட வைக்க வேண்டும் என்பதே தனது கருத்து என சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement