உங்க ஹனிமூன் நேரம் முடிந்துவிட்டது, இனிமே வேலையை பாருங்க – டிராவிடை விளாசும் முன்னாள் வீரர்

Dravid
Advertisement

2022 ஆசிய கோப்பையில் வெற்றிகரமான அணியாகவும் நடப்பு சாம்பியனாகவும் இதர அணிகளை காட்டிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட உலகின் நம்பர் ஒன் டி20 அணியாகவும் களமிறங்கிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியுள்ளது. தவறான அணி தேர்வு, தேர்வு செய்த வீரர்களை சரியாக பயன்படுத்தாதது, சுமாரான கேப்டன்ஷிப் போன்ற அம்சங்கள் இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

IND vs SL

மேலும் விராட் கோலி – ரவி சாஸ்திரி ஆகியோரது தலைமையில் உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் வெறுங்கையுடன் திரும்பிய இந்தியா கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் புதிதாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் தலைமையில் வழக்கம் போல இரு தரப்பு தொடர்களை அசால்டாக வென்றாலும் 6 அணிகள் பங்கேற்ற மினி உலகக்கோப்பையை போன்ற இந்த ஆசிய போட்டியில் மண்ணைக் கவ்வியுள்ளது. இதனால் இங்கேயே கோப்பையை வெல்லாத இந்தியா ஆஸ்திரேலியாவுக்குச் சென்று எங்கே கோப்பையை வெல்லப் போகிறது என்ற கவலை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சுமாரான டிராவிட்:
முன்னதாக 2017 முதல் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி உலக கோப்பையை வெல்லவில்லை என்ற விமர்சனங்களால் கடந்த வருடம் விடைபெற்றார். ஆனால் அவருக்குப்பின் பொறுப்பேற்ற ராகுல் டிராவிட் ஏற்கனவே 2016 முதல் அண்டர்-19 அளவில் பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவமுடையவர். அதனால் அங்கிருந்து வளர்க்கப்பட்ட வீரர்களே இங்கு விளையாடுவதால் அவரது தலைமையில் இந்தியா அசத்தலாக செயல்படும் என்று அனைவரும் நம்பினர். ஆனால் இதுவரை முக்கிய தொடர்களில் அவரது தலைமையில் இந்தியா சொதப்பியுள்ளது என்பதே நிதர்சனமாகும்.

Dravid

முதலில் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றதுமே வெளிநாடான தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்ற இந்தியா நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தையும் கோட்டை விட்டது. அதேபோல் சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் ரவி சாஸ்திரி பெற்றுக்கொடுத்திருந்த முன்னிலையை வீணாக்கும் வகையில் தோற்ற இந்தியா 2 – 2 (5) என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை சமன் மட்டுமே செய்தது. தற்போது முக்கியமான ஆசிய கோப்பையில் தோற்றுள்ளதால் முக்கியமான தொடர்களில் அவரது கோச்சிங் சுமாராகவே உள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஆசிய கோப்பையில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் வேண்டும் என்று அவர் தானே தேர்வு குழுவிடம் கேட்டு வாங்க வேண்டும். அத்துடன் சோதனை முயற்சி என்ற பெயரில் அவர் செய்யும் தேவையற்ற மாற்றங்கள் அணியை நிலையாக வைத்திருக்க உதவவில்லை. இந்நிலையில் புதிய கோச்சாக பொறுப்பேற்ற முதல் வருடத்தில் இதுவரை சுமாராக செயல்பட்ட ராகுல் டிராவிட் தன்னுடைய அவகாச நேரங்கள் முடிந்துவிட்டது என்பதை கருத்தில் கொண்டு விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை மற்றும் அடுத்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் கவனிப்புடன் செயல்பட வேண்டுமென்று முன்னாள் இந்திய வீரர் சபா கரிம் விமர்சித்துள்ளார்.

Karim

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ராகுல் டிராவிட்டுக்கு தன்னுடைய தேனிலவு நேரம் முடிந்து விட்டது என்பது தெரியும். அவர் சிறந்தவராக இருக்க தன்னால் முடிந்தவரை முயற்சிக்கிறார். ஆனால் இதுவரை அவருடைய முயற்சிகள் உண்மையான வெற்றியாக மாற்றப்படவில்லை. இது ராகுல் டிராவிட்டுக்கு முக்கியமான நேரமாகும்.

- Advertisement -

ஏனெனில் விரைவில் டி20 உலகக்கோப்பையும் அடுத்த வருடம் பெரிய உலகக்கோப்பையும் வர உள்ளது. அந்த 2 தொடர்களையும் வென்றால் ராகுல் டிராவிட் தன்னுடைய பயிற்சியில் திருப்தியடைய முடியும்”. “ஏனெனில் கடந்த ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவிலும் சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடர்களை அவர் வெல்ல விரும்பியிருப்பார். அந்த தோல்விகளை சமீபத்திய இரு தரப்பு தொடர்களின் வெற்றிகளை வைத்து மாற்றிக்கொள்ள அவர் விரும்புகிறார்.

Dravid-1

இருப்பினும் இதுபோன்ற சவால்களை தான் ராகுல் டிராவிட் எதிர்கொள்ள வேண்டும். மேலும் ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பயணத்தில் உண்மையான வெற்றியை 2 விஷயங்களால் மட்டுமே தொட முடியும் என்று புரிந்து கொள்ளக் கூடியவர்” “ஒன்று ஐசிசி உலகக்கோப்பைகளை வெல்வது மற்றொன்று சேனா நாடுகள் எனப்படும் ஆசியக் கண்டத்திற்கு வெளியே டெஸ்ட் தொடர்களை வெல்வது.

இதையும் படிங்க : ஒரு கோடி கொடுத்தாலும் சரி நான் குடுக்க மாட்டேன். இணையத்தில் வைரலாகும் – கோலியின் பாக் ரசிகர்

இதில் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெறுவது ராகுல் டிராவிட் விளையாடிய போதே நடந்துள்ளது. இருப்பினும் அதை விட தற்போது சேனா நாடுகளில் அதிக வெற்றிகளை பெற்றால் தான் ராகுல் டிராவிட் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்” என்று கூறினார்.

Advertisement