ஒரு கோடி கொடுத்தாலும் சரி நான் குடுக்க மாட்டேன். இணையத்தில் வைரலாகும் – கோலியின் பாக் ரசிகர்

Kohli-Fan
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வருபவர் விராட் கோலி. பொதுவாகவே சதங்களை அடிப்பதை வாடிக்கையாக கொண்ட அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 70-வது சதத்தை பதிவு செய்திருந்தார். அதன் காரணமாக அப்போதே சச்சின் டெண்டுல்கரின் 100 சதத்தை விராட் கோலி தான் தகர்ப்பார் என்று அனைவரும் கூறி வந்தனர். ஆனால் அதன் பிறகு கடந்த இரண்டரை ஆண்டுகளாக சதம் அடிக்காமல் விராட் கோலி தவித்து வந்தார்.

Virat Kohli

- Advertisement -

அதனால் கோலியின் இந்த 71-வது சதம் எப்போது வரும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் 1019 நாட்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 போட்டியில் விராட் கோலி தனது 71-வது சதத்தை விளாசினார். அதோடு டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலிலும் விராட் கோலி இணைந்தார்.

அதுமட்டும் இன்றி தனிப்பட்ட வகையில் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களை அடித்த வீரராக விராட் கோலி முதல் இடம் பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 122 ரன்கள் விளாசியதன் மூலம் இந்த சாதனையை கோலி நிகழ்த்தியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியதற்கு பிறகு தற்போது முழுநேரமாக விளையாடி வரும் அவர் இந்த சதத்தினை அடித்ததன் மூலம் தன் மீது எழுப்பப்பட்டு வந்த விமர்சனங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலியிடம் போட்டி முடிந்து பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் அவரது பேட்டில் விராட் கோலியின் கையொப்பத்தை பெற்றுக் கொண்டார். அவரது விபரம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அதன்படி பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அந்த ரசிகர் பொதுவாகவே கிரிக்கெட் வீரர்களின் கையொப்பங்களை தனது பேட்டில் பெறுவது வழக்கம்.

அந்த வகையில் ஏற்கனவே பல வீரர்களின் கையெழுத்துக்களை வாங்கியுள்ள அவர் ஆப்கானிஸ்தான் போட்டி முடிந்து விராட் கோலியின் கையொப்பத்தை கேட்டுள்ளார். விராட் கோலியும் அவரின் வேண்டுகோளுக்கிணங்க அவரது பேட்டில் தனது கையொப்பத்தை இட்டுள்ளார். இந்நிலையில் அந்த ரசிகரை பேட்டி எடுத்த நிருபர் ஒருவர் விராட் கோலி கையொப்பமிட்ட இந்த பேட்டை நான் 4000 முதல் 5000 திராம் (இந்திய மதிப்பில் 1 லட்சம்) தருகிறேன் என்னிடம் கொடுத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க : லெஜன்ட்கள் பங்கேற்கும் ரோட் சேஃப்ட்டி உலக சீரிஸ் 2022 : அட்டவணை, அணிகள், எந்த சேனலில் பார்க்கலாம் – முழுவிவரம்

ஆனால் அதற்கு பதிலளித்த அந்த பாகிஸ்தான் ரசிகர் : ஒரு கோடி கொடுத்தாலும் நான் இந்த பேட்டை உங்களிடம் கொடுக்க மாட்டேன். இந்த பேட் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. இதனை நான் என்னுடனே வைத்துக்கொள்ள விரும்புகிறேன் என்று பதில் அளித்தார். விராட் கோலிக்கு உலகெங்கிலும் உள்ள தீவிர ரசிகர்களுக்கு மத்தியில் பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement