லெஜன்ட்கள் பங்கேற்கும் ரோட் சேஃப்ட்டி உலக சீரிஸ் 2022 : அட்டவணை, அணிகள், எந்த சேனலில் பார்க்கலாம் – முழுவிவரம்

Sachin Tendulkar Irfan Pathan Road Safety Series Yuvraj Sing
- Advertisement -

கிரிக்கெட் என்பது விளையாட்டு என்பதுடன் இந்தியா போன்ற நாடுகளிலுள்ள ரசிகர்களுக்கு உணர்வுபூர்வமான ஒன்றாகும். ஏனெனில் அதில் பெறும் வெற்றியை தங்களது வெற்றியாகவும் அதில் வெற்றி பெற்று கொடுக்கும் வீரர்களை தங்களது சூப்பர் ஸ்டார்களாவும் கொண்டாடுவதற்கு ரசிகர்கள் எப்போதும் தயங்குவதில்லை. ஆனால் அந்த நட்சத்திர வீரர்கள் வயது காரணமாக ஒரு கட்டத்தில் ஓய்வு பெறுவதால் அவருடைய ஆட்டத்தை மேற்கொண்டு பார்க்க முடியாத ஏக்கம் ரசிகர்களுக்கு ஏற்படுகிறது. அவர்களுக்காகவே சமீப காலங்களில் ஓய்வு பெற்ற ஜாம்பவான்கள் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் தொடர்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன.

அதில் விபத்துக்களை தவிர்த்து மக்களின் உயிரை காப்பாற்றுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் துவங்கப்பட்ட தொடர் தான் “ரோட் சேஃப்டி வேர்ல்ட் சீரீஸ்” ஆகும். ஓய்வு பெற்ற வீரர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் உன்னத நோக்கத்திலும் கடந்த 2020இல் துவங்கப்பட்ட இந்த தொடரின் முதல் சீசனில் 6 அணிகள் பங்கேற்றன.

- Advertisement -

அதில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜெண்ட்ஸ் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று அசத்தியது. ரசிகர்களின் அபரிதமான வரவேற்ப்பை பெற்ற அந்த தொடரின் 2வது சீசன் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ள டேராடூன், கான்பூர், ராய்ப்பூர், இந்தூர் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. இன்றைய முதல் போட்டியில் நடப்பு சாப்பியன் இந்திய மற்றும் தென்னாப்ப்ரிக்க லெஜெண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

அட்டவணை & ஃபார்மட்:
கடந்த வருடம் 6 அணிகள் மட்டுமே பங்கேற்ற இந்த தொடரில் இம்முறை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து லெஜெண்ட்ஸ் அணிகளும் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் உலகக்கோப்பையை போல் 8 நாடுகளை சேர்ந்த சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஜான்டி ரோட்ஸ் உள்ளிட்ட ஏராளமான ஜாம்பவான்கள் இத்தொடரில் களமிறங்க உள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

- Advertisement -

இதில் பங்கேற்கும் 8 அணிகளும் லீக் சுற்றில் 5 போட்டிகளில் களமிறங்க உள்ளன. அதாவது ஒரு அணி குறிப்பிட்ட 5 அணிகளுடன் மட்டும் லீக் சுற்றில் விளையாடும். அதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 2 அரையிறுதிப் போட்டிகளில் மோத உள்ளன. அதில் வெல்லும் அணிகள் அக்டோபர் 1ஆம் தேதியன்று நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்த தொடருக்கான முழு அட்டவணை இதோ (நேரங்கள் அனைத்தும் இந்திய நேரமாகும்):
செப்டம்பர் 10, சனிக்கிழமை:
1. இந்திய லெஜெண்ட்ஸ் V தென்னாப்பிரிக்கா லெஜெண்ட்ஸ், இரவு 7.30, கான்பூர்
செப்டம்பர் 11, ஞாயிற்றுக்கிழமை:
செப்டம்பர் 11,  ஞாயிற்றுக்கிழமை:
2. பங்களாதேஷ் லெஜெண்ட்ஸ் V வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட்ஸ், மதியம் 3.30, கான்பூர்,
3. ஸ்ரீலங்கா லெஜெண்ட்ஸ் V ஆஸ்திரேலியா லெஜெண்ட்ஸ், இரவு 7.30, கான்பூர்
செப்டம்பர் 12, திங்கள் கிழமை:
4. நியூஸிலாந்து லெஜெண்ட்ஸ் V சௌத் ஆப்பிரிக்கா லெஜெண்ட்ஸ், இரவு 7.30, கான்பூர்
செப்டம்பர் 13, செவ்வாய்க்கிழமை:
5. இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் V ஸ்ரீலங்கா லெஜெண்ட்ஸ், இரவு 7.30, கான்பூர்
செப்டம்பர் 14, புதன்கிழமை:
6. இந்தியா லெஜெண்ட்ஸ் V வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட்ஸ், இரவு 7.30, கான்பூர்.

- Advertisement -

செப்டம்பர் 15, வியாழக்கிழமை:
7. பங்களாதேஷ் லெஜெண்ட்ஸ் V நியூஸிலாந்து லெஜெண்ட்ஸ், இரவு 7.30, கான்பூர்
செப்டம்பர் 17, சனிக்கிழமை:
8. இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் V வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட்ஸ், மதியம் 3.30, இந்தூர்
9. ஸ்ரீலங்கா லெஜெண்ட்ஸ் V சௌத் ஆப்பிரிக்கா லெஜெண்ட்ஸ், இரவு 7.30, இந்தூர்
செப்டம்பர் 18, ஞாயிற்றுக்கிழமை:
10. ஆஸ்திரேலியா லெஜெண்ட்ஸ் V பங்களாதேஷ் லெஜெண்ட்ஸ், இந்தூர், மதியம் 3:30
11. இந்தியா லெஜெண்ட்ஸ் V நியூஸிலாந்து லெஜெண்ட்ஸ் , இந்தூர், இரவு 7:30, இந்தூர்.
செப்டம்பர் 19, திங்கள் கிழமை:
12. இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் V சௌத்ஆப்பிரிக்கா லெஜெண்ட்ஸ், இந்தூர், இரவு 7:30
செப்டம்பர் 21, புதன்கிழமை:
13. இந்தியா லெஜெண்ட்ஸ் V பங்களாதேஷ் லெஜெண்ட்ஸ், டேராடூன், இரவு 7:30
செப்டம்பர் 22, வியாழக்கிழமை:
14. வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட்ஸ் V நியூஸிலாந்து லெஜெண்ட்ஸ், டேராடுன், இரவு 7:30

செப்டம்பர் 23, வெள்ளிக்கிழமை:
15. ஆஸ்திரேலியா லெஜெண்ட்ஸ் V சௌத் ஆப்பிரிக்கா லெஜெண்ட்ஸ், டேராடுன், இரவு 7:30
செப்டம்பர் 24, சனிக்கிழமை:
16. இந்தியா லெஜெண்ட்ஸ் V இங்கிலாந்து லெஜெண்ட்ஸ், டேராடுன், இரவு 7:30
செப்டம்பர் 25, ஞாயிற்றுக்கிழமை:
17. ஸ்ரீலங்கா லெஜெண்ட்ஸ் V நியூஸிலாந்து லெஜெண்ட்ஸ், டேராடுன், மதியம் 3:30
18. ஆஸ்திரேலியா லெஜெண்ட்ஸ் V வெஸ்ட்இண்டீஸ் லெஜெண்ட்ஸ், டேராடுன், இரவு 7:30
செப்டம்பர் 27, செவ்வாய்கிழமை:
19. ஸ்ரீலங்கா லெஜெண்ட்ஸ் V பங்களாதேஷ் லெஜெண்ட்ஸ், ராய்ப்பூர், மதியம் 3.30
20. இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் V ஆஸ்திரேலியா லெஜெண்ட்ஸ், ராய்ப்பூர், இரவு 7:30

- Advertisement -

செப்டம்பர் 28, முதல் அரையிறுதி : இரவு 7.30, ராய்ப்பூர்.
செப்டம்பர் 29, 2வது அரையிறுதி இரவு 7.30 ராய்ப்பூர்
அக்டோபர் 1 : பைனல், ராய்ப்பூர், இரவு 7.30

எதில் பார்க்கலாம் & அணிகள்:
இந்த தொடரை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் கலர்ஸ் சினிப்லக்ஸ், கலர்ஸ் சினிப்லக்ஸ் சூப்பர் ஹிட்ஸ், ஸ்போர்ட்ஸ் 18 கேல் ஆகிய 3 தொலைக்காட்சி சேனல்களில் கண்டு களிக்கலாம். அதேபோல் வூட் மொபைல் ஆப் வாயிலாக ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

இந்திய லெஜெண்ட்ஸ்: சச்சின் டெண்டுல்கர் (கேப்டன்), யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான், ஹர்பஜன் சிங், முனாஃப் படேல், சுப்ரமணியம் பத்ரிநாத், ஸ்டூவர்ட் பின்னி, நமன் ஓஜா, கோணி, பிரக்யன் ஓஜா, வினை குமர், அபிமன்யு மிதுன், ராஜேஷ் பவர், ராகுல் சர்மா.

நியூஸிலாந்து லெஜெண்ட்ஸ்: ராஸ் டெய்லர் (கேப்டன்), ஜேக்கப் ஓரம், ஜெமி ஹொவ், ஜேசன் ஸ்பைஸ், கைல் மில்ஸ், ஸ்காட் ஸ்டைரிஸ், ஷேன் பாண்ட், டீன் ப்ரோவ்னில், ப்ரூஸ் மார்ட்டின், நெய்ல் ப்ரூம், தேவிச், கிரைக் மெக்மில்லன், ஹோப்கின்ஸ், ஹிமிஸ் பென்னட், ஆரோன் ரெட்மொண்ட்

ஆஸ்திரேலிய லெஜெண்ட்ஸ்: ஷேன் வாட்சன் (கேப்டன்), அலெஸ் டூலன், பென் டங், பிராட் ஹோட்ஜ், பிராட் ஹடின், ஸ்டூவர்ட் கிளார்க், ப்ரிஸ் மெக்கைன், காலும் பெர்குசன், கேமரூன் ஒயிட், ஜார்ஜ் ஹார்ட்லின், ஜேசன் கேரேஜ்சா, ஜான் ஹஸ்டிங்ஸ், டிர்க் நானிஸ், நாதன் ரியர்டான், சாட் சாயேர்ஸ்

இலங்கை லெஜெண்ட்ஸ்: திலகரத்ன டில்சான் (கேப்டன்), கௌசல்யா வீரரத்னே, மகிலா உடவட்டே, ரமேஷ் சில்வா, அசெலா குணரத்னே, சமரா சில்வா, இசுரு உதானா, சமிந்தா வாஸ், சமரா கப்புகேந்திரா, சதுரங்க டி சில்வா, தம்மிகா பிரசாத், சின்தக்கா ஜெயசிங்கே, ஜீவன் மென்டிஸ், இஷான் ஜெயரத்னே, தில்ஷான் முனவீரா, டில்ருவான் பெரேரா, நுவான் குலசேகரா, சனத் ஜெயசூரியா, உபுல் தரங்கா, திசாரா பெரேரா.

இங்கிலாந்து லெஜெண்ட்ஸ்: இயன் பெல் (கேப்டன்), நிக் காம்ப்டன், பில் முஸ்டர்ட், கிறிஸ் ட்ரெம்லெட், டேரன் மேடி, மால் லோயி, ஜெட் டென்பிரிச், ஸ்டீபன் பாரி, ரிக்கி கிளார்க், ஜேம்ஸ் டின்டால், டிம் அம்ப்ரோஸ், டிமிர்த்தி மஸ்கிரனேஷ், கிறிஸ் ஸ்கோபீல்டு

வெஸ்ட்இண்டீஸ் லெஜெண்ட்ஸ்: பிரைன் லாரா (கேப்டன்), டான்சா ஹைட், தேவேந்திர பிசூ, ட்வயன் ஸ்மித், ஜெரோம் டெய்லர், க்ரிக் எட்வர்ட்ஸ் மார்லான் இயன் ப்ளாக், நரசிங் டியோநரேன், வில்லியம் பெர்கின்ஸ், டேரன் போவல், சுலைமான் பென், டாரியோ பர்த்லி, தேவ் முகமத், கிறிஸ்மர் சந்தோக்கி

வங்கதேசம் லெஜெண்ட்ஸ்: ஷாகாடட் ஹொசைன் (கேப்டன்), அப்துர் ரசாக், அலகிர் கபீர், அப்டப் அஹமத், அலோக் கபாலி, மாமுன் உர் ரசித், கலில் மசூத், டாலர் மகமுத், டிமன் கோஷ், நஸ்முஸ் சடட், முஹம்மது சாரிப், மெக்ரப் ஹொசைன், எளிஸ் சன்னி, துஷார் இம்ரான், அப்துல் ஹஸன், முகமத் நசீம்முடின்

தென்ஆப்பிரிக்க லெஜெண்ட்ஸ்: ஜான்டி ரோட்ஸ் (கேப்டன்) ஆல்விரோ பீட்டர்சன், ஆண்ட்ரூ புடிக், எடி லீ, ஜேக் ரூடோல்ப், ஹென்றி டேவிட்ஸ், க்ரானட் க்ரூஜர், ஜோகன் போத்தா, வன் டெர் வாத், லன்ஸ் க்ளூஸ்னர், மகாயா நிடினி, வேர்னன் ஃபிளாந்தர், நோரிஸ் ஜோன்ஸ், மோர்னே வன் விக், சண்டர் டீ ப்ருன், சபலாலா

Advertisement