நீங்க எதுக்கு ஐ.பி.எல் விளையாட வறீங்க? டேவிட் வார்னரை நேரடியாக விமர்சித்த சேவாக் – எதற்கு தெரியுமா?

Sehwag
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி அணியானது தொடர்ச்சியாக தோல்விகளை பெற்று வருவது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்று இந்த தொடரில் தங்களது மூன்றாவது தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் ஜெயஸ்வால் மற்றும் பட்லர் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 199 ரன்களை குவித்தது.

பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது ஆரம்பத்திலிருந்து விக்கெட்டுகளை இழக்க இறுதியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் முதல் ஓவரிலேயே பிரதிவி ஷா மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். அதன் பிறகு டெல்லி அணியால் எந்த ஒரு கட்டத்திலும் அந்த சரிவிலிருந்து மீண்டு வர முடியவில்லை.

David Warner DC

இருப்பினும் டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மட்டும் 55 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அவரது இந்த ஆட்டம் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்தது. ஏனெனில் பொதுவாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வார்னர் நேற்றைய போட்டியில் விக்கெட்டுகள் விழுந்ததால் பொறுமையாக விளையாடினாலும் அவர் அடித்த ரன்கள் தேவை இல்லாத ஒன்று என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், டெல்லி அணியின் முன்னாள் கேப்டனுமான வீரேந்திர சேவாக் இந்த ஆட்டம் குறித்து பேசுகையில் ” நான் ஆங்கிலத்தில் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. அப்போதுதான் இது அவருக்கு புரியும் நீங்கள். 25 பந்துகளில் 50 ரன்கள் எடுக்க வேண்டும். எவ்வாறு அதிரடியாக விளையாட வேண்டும் என்று ஜெய்ஷ்வால் போன்ற இளம்வீரர்களை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். அப்படி முடியவில்லையென்றால் தயவு செய்து ஐபிஎல் போட்டிகளுக்கு விளையாட வர வேண்டாம்.

இதையும் படிங்க : வீடியோ : ரசித் கான் ஹாட்ரிக் மேஜிக்கை உடைத்த ரிங்கு சிங், கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை தெறிக்க விட்டு அசத்தியமான வெற்றி

நீங்கள் 30 ரன்களில் எடுத்து ஆட்டம் இழந்தால் கூட அது அணிக்கு நல்ல விடயம் தான். ஆனால் 50, 60 ரன்கள் எடுக்கும் போது அதிக பந்துகளை எடுத்துக் கொண்டால் பின்வரிசையில் விளையாடும் வீரர்களுக்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை. எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு விளையாட வேண்டும் என சேவாக் அவரைக் காட்டமாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement