வீடியோ : ரசித் கான் ஹாட்ரிக் மேஜிக்கை உடைத்த ரிங்கு சிங், கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை தெறிக்க விட்டு அசத்தியமான வெற்றி

Rinku SIngh
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 9ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற 13வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா பங்கேற்காத நிலையில் குஜராத்தை வழி நடத்திய ரஷீத் கான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு ரித்திமான் சஹா 17 (17) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் அடுத்து வந்த சாய் சுதர்சனுடன் கை கோர்த்த சுப்மன் கில் 5 பவுண்டரியுடன் 39 (31) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் களமிறங்கிய அபினவ் மனோகர் 14 (8) ரன்களில் அவுட்டான நிலையில் மறுபுறம் அசத்தலாக பேட்டிங் செய்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 53 (38) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். ஆனால் கடைசி நேரத்தில் யாருமே எதிர்பார வகையில் வெளுத்து வாங்கிய மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் லாக்கி பெர்குசன் வீசிய 19வது ஓவரில் 24 ரன்களை விளாசி ஷார்துல் தாகூர் வீசிய கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 63* (24) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவர்களில் குஜராத் 204/4 ரன்கள் எடுக்க கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக சுனில் நரைன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

ரசித் ஹாட்ரிக்:
அதை தொடர்ந்து 205 என்ற கடினமான இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு ரஹ்மத்துல்லா குர்பாஸ் 15 (12) ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் தமிழக வீரர் ஜெகதீசனும் 6 (8) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் அடுத்த களமிறங்கிய கேப்டன் நித்திஷ் ராணா – வெங்கடேஷ் ஆகியோர் நீண்ட நாட்கள் கழித்து அதிரடியாக பேட்டிங் செய்து சரிவை சரி செய்தனர். குறிப்பாக சமீப காலங்களில் தடுமாறி விமர்சனங்களை சந்தித்த வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடி அரை சதமடித்தார்.

அவருடன் தனது பங்கிற்கு சிறப்பாக செயல்பட்டு 3வது விக்கெட் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அசத்திய நித்திஷ் ராணா 4 பவுண்டரி 3 சிக்சருடன் 45 (29) ரன்கள் விளாசி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அவரை விட மறுபுறம் இம்பேக்ட் வீரராக அசத்திய வெங்கடேஷ் ஐயர் 8 பவுண்டரி 5 சித்தருடன் 83 (40) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். அப்போது குறுக்கே வந்த ரசித் கான் 17வது ஓவரில் ஆண்ட்ரே ரசல் 1 (2), சுனில் நரேன் 0 (1), ஷார்துல் தாகூர் 0 (1) என அடுத்தடுத்த 3 விக்கெட்டுகளை எடுத்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை சாய்த்த முதல் குஜராத் வீரராக சாதனை படைத்து போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தினார்.

- Advertisement -

அதனால் கடைசி 27 பந்துகளில் கொல்கத்தாவின் வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்டதால் குஜராத் வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்போது களமிறங்கிய இளம் வீரர் ரிங்கு சிங் அதிரடியாக விளையாட முயற்சித்து ஜோசுவா லிட்டில் வீசிய 19வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்த சிக்சர்களைப் பறக்க விட்டு போராடினார். அதனால் யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் உமேஷ் யாதவ் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக் கொடுத்தார்.

அப்போது கருணை காட்டாமல் அடுத்தடுத்த ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்ட ரிங்கு சிங் வெறித்தனமாக வெற்றிக்கு போராடி அடுத்த 2 பந்துகளிலும் சிக்சர்களை விளாசி மொத்தமாக கடைசி 5 பந்துகளில் 5 சிக்ஸர்களை தெறிக்க விட்டு 20 ஓவரில் கொல்கத்தாவை 207/7 ரன்கள் குவிக்க வைத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

இதையும் படிங்க: வீடியோ : அபார கேட்ச் பிடித்த ஜெகதீசன், மீண்டும் க்ளாஸ் காட்டிய சுதர்சன் – குஜராத்துக்காக விஜய் சங்கர் மிரட்டல் சாதனை

குறிப்பாக ரசித் கான் ஹாட்ரிக் மேஜிக்கை உடைத்த அவர் 1 பவுண்டரி 6 சிக்சருடன் 48* (21) ரன்கள் விளாசி காலத்திற்கும் மறக்க முடியாத வெற்றியை பதிவு செய்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி பாராட்ட வைத்துள்ளது.

Advertisement