ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக சி.எஸ்.கே வீரரை டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்த – வீரேந்திர சேவாக்

Sehwag-Hardik
- Advertisement -

இந்தியாவில் தற்போது ஐபிஎல் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்ற வரும் வேளையில் ரசிகர்கள் அனைவருமே இந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்புடனே இருந்து வருகின்றனர். தற்போது கிட்டத்தட்ட ஒரு மாதத்தை கடந்துள்ள ஐபிஎல் தொடரானது எதிர்வரும் மே 26-ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. அப்படி ஐபிஎல் தொடர் முடிவடைந்த அடுத்த வாரத்திலேயே டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது துவங்க உள்ளது.

ஜூன் இரண்டாம் தேதி துவங்கும் டி20 உலகக்கோப்பை தொடரானது ஜூன் மாதம் இறுதி வரை நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்க இருப்பதினால் இந்த தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கும் அனைத்து அணிகளையும் மே 1-ஆம் தேதிக்குள் தங்களது அணியின் வீரர்களை அறிவிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்துள்ளதால் இந்திய அணியும் இவ்வார இறுதியிலோ அல்லது மே மாதம் முதல் நாளோ டி20 உலக கோப்பை தொடருக்கான அணியை அறிவித்து விடும்.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறப்போகும் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள், ஆல்ரவுண்டர்கள் மற்றும் விக்கெட் கீப்பர்கள் யார்? யார்? என முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது தேர்வுகளை வழங்கி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் தன்னுடைய டி20 உலகக் கோப்பை டி20 தொடருக்கான ஆடும் பிளேயிங் லெவன் அணியில் ஹார்டிக் பாண்டியாவிற்கு இடம் வழங்கவில்லை, மேலும் அவருக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரரான ஷிவம் துபேவுக்கு அவர் இடம் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : 2, 6, 4, 6, 6, 6.. ஒரே ஓவரில் 30 ரன்ஸ் தெறிக்க விட்ட ரிஷப் பண்ட்.. ஐபிஎல் வரலாற்றில் மோகித் சர்மா மோசமான சாதனை

பிளேயிங் லெவனில் அவருக்கு இடம் வழங்கவில்லை என்றாலும் 15 பேர் கொண்ட அணியில் பாண்டியாவிற்கு சேவாக் இடம் வழங்கியுள்ளார். ஏற்கனவே ரெய்னா டி20 உலக கோப்பை தொடரில் ஷிவம் துபே-க்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறியிருந்த வேளையில் தற்போது சேவாக்கும் அவருக்கு ஆதரவாக தேர்வு செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியம் அடையவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement