2, 6, 4, 6, 6, 6.. ஒரே ஓவரில் 30 ரன்ஸ் தெறிக்க விட்ட ரிஷப் பண்ட்.. ஐபிஎல் வரலாற்றில் மோகித் சர்மா மோசமான சாதனை

DC vs GT
- Advertisement -

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 24ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் 40வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு ஜேக் ப்ரேஷர்-மெக்குர்க் 23 (14) ரன்களில் சந்தீப் வாரியார் வேகத்தில் அவுட்டானார்.

அதே ஓவரில் மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த பிரிதிவி ஷா 11 (7) ரன்களில் சந்தீப் வாரியார் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அதோடு நிற்காத சந்திப் வாரியர் அடுத்ததாக வந்த சாய் ஹோப்பை 5 (6) ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே டெல்லிக்கு அச்சுறுத்தலை கொடுத்தார். அதனால் 44/3 என தடுமாறிய டெல்லிக்கு அடுத்ததாக வந்த அக்சர் படேல் மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோர் அதிரடியாக ரன்கள் குவித்தனர்.

- Advertisement -

மோசமான சாதனை:
குறிப்பாக பேட்டிங்கில் நீண்ட நாட்கள் கழித்து முன்கூட்டியே விளையாடும் வாய்ப்பை பெற்ற அக்சர் படேல் அதை வீணடிக்காமல் சிறப்பாக விளையாடினார். அந்த வகையில் மிடில் ஓவர்கள் முழுவதும் குஜராத் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து டெல்லியை வலுப்படுத்தியது.

அப்போது அரை சதமடித்த அக்சர் பட்டேல் 5 பவுண்டரி 4 சிக்ஸருடன் 66 (42) ரன்கள் குவித்து தன்னுடைய அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் பதிவு செய்து சொந்த சாதனையுடன் ஆட்டமிழந்தார். அவருடன் மறுபுறம் சேர்ந்து விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட் 34 பந்துகளில் அரை சதம் கடந்து டெல்லியை 200 ரன்கள் தாண்ட வைத்தார். நேரம் செல்ல செல்ல வெளுத்து வாங்கிய அவர் கடைசி வரை அவுட்டாகாமல் 5 பவுண்டரி 8 சிக்ஸருடன் 88* (43) ரன்களை 204.65 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

குறிப்பாக மோகித் சர்மா வீசிய கடைசி ஓவரில் 2, ஒய்ட், 6, 4, 6, 6, 6 என மொத்தம் 30 ரன்கள் குவித்த அவர் டெல்லிக்கு அற்புதமான பினிஷிங் கொடுத்தார். மறுபுறம் அவரிடம் சரமாரியாக அடி வாங்கிய மோகித் சர்மா மொத்தம் 4 ஓவரில் 73 ரன்கள் கொடுத்தார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையும் அவர் படைத்தார்.

இதையும் படிங்க: இந்தியர்கள் ஏழை நாட்டுக்கு போக மாட்டோம்.. உங்க காசு அதுக்கே பத்தாது.. கில்கிறிஸ்ட்டை கலாய்த்த சேவாக்

இதற்கு முன் 20118இல் பெங்களூரு அணிக்கு எதிராக ஹைதராபாத் வீரர் பேசில் தம்பி 70 ரன்கள் கொடுத்ததே முந்தைய சாதனையாகும். இறுதியில் அவருடன் எதிர்புறம் கடைசி நேரத்தில் வெளுத்து வாங்கிய ட்ரிஷன் ஸ்டப்ஸ் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 26* (7) ரன்கள் குவித்தார். அதனால் 20 ஓவரில் டெல்லி 224/4 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் அதிகபட்சமாக சந்திப் வாரியர் 3 விக்கெட்டுகள் எடுத்தார்

Advertisement