அவரோட டெக்னிக்ல சில ஓட்டைகள் இருக்கு. அவர் ஒரு கம்ப்ளீட் பிளேயர் கிடையாது – ஸ்காட் ஸ்டைரிஸ் கருத்து

Styris
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே அண்மையில் நடைபெற்ற முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி மூன்றுக்கும் பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் இந்திய அணி பெற்ற மூன்று வெற்றிக்கும் முக்கிய காரணமாக அணியின் துவக்க வீரரான சுப்மன் கில் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் இந்த மூன்று போட்டிகளிலுமே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 205 ரன்கள் அடித்ததோடு தொடர் நாயகன் விருதினையும் பெற்று அசத்தியிருந்தார்.

Shubman-Gill

- Advertisement -

அதோடு மழை காரணமாக பாதிக்கப்பட்ட மூன்றாவது போட்டியில் 98 ரன்கள் குவித்து அவர் நாட் அவுட் ஆகவும் இருந்தது அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய பாராட்டினை பெற்றது. ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா இடம்பெறாததால் துவக்க வீரராக களமிறங்கிய கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். இதன் காரணமாக அவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

இந்நிலையில் சுப்மன் கில் ஒரு கம்ப்ளீட் பிளேயர் கிடையாது என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்காட் ஸ்டைரிஸ் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கிரிக்கெட்டை பொருத்தவரை எப்போதுமே கற்றுக்கொள்ள வேண்டிய விடயம் நிறைய இருக்கிறது. 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் கூட தனது கடைசி காலகட்டத்தில் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டே தான் இருந்தார்.

Shubman Gill 1

அந்த வகையில் இளம் வீரரான கில்லை இப்போதே சிறந்த வீரர் என்று அடையாளம் இடுவது தவறு. அவர் ஒரு கம்ப்ளீட் பிளேயர் கிடையாது. அவருடைய டெக்னிக்கில் இன்னும் சில ஓட்டைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதனை அவர் கண்டறிந்து சரிப்படுத்தியாக வேண்டிய அவசியம் உள்ளது. இல்லையெனில் எதிரணிகள் அவரை எளிதாக வீழ்த்த நேரிடும் என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய ஸ்டைரிஸ் கூறுகையில் : ஒரு வேர்ல்டு கிளாஸ் பிளேயர் என்பவர் தன்னுடைய பேட்டிங்கை எவ்வாறெல்லாம் மேம்படுத்த வேண்டும் என்பதை பற்றி மனதளவில் யோசித்து அதற்கு ஏற்ற பயிற்சியை மேற்கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும். அவ்வாறு தொடர்ச்சியாக தங்களது திறனை முன்னேற்றி கொண்டால் மட்டுமே கிரிக்கெட்டில் நீண்ட காலம் நீடிக்க முடியும்.

இதையும் படிங்க : IND vs ZIM : ஜிம்பாப்வே தொடரில் விராட் கோலி இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம் – ராகுலை கலாய்க்கும் ரசிகர்கள்

அந்தவகையில் என்னை பொறுத்தவரை சுப்மன் கில் தற்போது மிக இளம் வயது வீரராக இருக்கிறார். அவர் இனிவரும் காலங்களில் நிறைய பயிற்சியை மேற்கொண்டு நிறைய சூழ்நிலைகளை புரிந்து கொண்டு விளையாடினால் நல்ல வீரராக மாறுவார் என்று ஸ்டைரிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement