IND vs ZIM : ஜிம்பாப்வே தொடரில் விராட் கோலி இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம் – ராகுலை கலாய்க்கும் ரசிகர்கள்

Rahul-1
- Advertisement -

தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் முடித்துக் கொண்டு நாடு திரும்பும் இந்தியா ஒரு வாரம் இடைவெளிக்குப்பின் ஜிம்பாப்வேயில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் தலைநகர் ஹராரேயில் நடைபெறும் அந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் ஓய்வெடுக்கும் நிலையில் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் அசத்திய ஷிகர் தவான் மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த தொடரில் சமீப காலங்களில் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய ராகுல் திரிபாதி முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் இஷான் கிசான், ருதுராஜ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், முகமது சிராஜ் போன்ற திறமையான இளம் வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் காயத்தால் அணியிலிருந்து வெளியேறிய குல்தீப் யாதவ், தீபக் சஹர் மற்றும் தமிழகத்தின் வாசிங்டன் சுந்தர் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

விராட் கோலி:
இருப்பினும் இந்த தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சேர்க்கப்படாதது ஏமாற்றமளிப்பதாக பெரும்பாலான ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். ஏனெனில் கடந்த 10 வருடங்களாக ரன் மெஷினாக 20000க்கும் மேற்பட்ட ரன்களையும் 70 சதங்களையும் வெளுத்து வாங்கி ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் கடந்த 2019க்குப்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 100 போட்டிகளுக்கு மேலாக சதமடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

அதிலிருந்து விடுபடுவதற்காக கேப்டன்சிப் பொறுப்புகளை படிப்படியாக ராஜினாமா செய்து சுதந்திரப் பறவையாக விளையாடத் தொடங்கிய அவர் ஐபிஎல் 2022 தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டானது, சமீபத்திய இங்கிலாந்து தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்காதது என முன்பை விட சுமாராக செயல்படுகிறார். அதனால் பொறுமையிழந்த கபில் தேவ் உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் பெரிய பெயரை வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் விளையாடுவீர்கள் என்ற வகையில் அணியிலிருந்து நீக்குமாறு விமர்சித்தனர்.

- Advertisement -

மீண்டும் ஓய்வு:
இருப்பினும் ஏற்கனவே 70 சதங்களை அடித்து ஜாம்பவானாக நிரூபித்துள்ள அவருக்கு கெவின் பீட்டர்சன், கிரேம் ஸ்வான் உட்பட நிறைய வெளிநாட்டவர்கள் ஆதரவு கொடுக்கின்றனர். அதன் காரணத்தாலே பார்ம் என்பதை காரணம் காட்டி அவரை நீக்காமல் இந்திய அணி நிர்வாகமும் ஆதரவளித்து வருகிறது. மேலும் இந்த மோசமான நிலையிலிருந்து திரும்ப சில மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு ரவி சாஸ்திரி போன்றோர் முன்னாள் வீரர்கள் கொடுத்த ஆலோசனைகளை ஏற்க மறுத்த விராட் கோலி தொடர்ச்சியாக விளையாடினால் தானே ரன்கள் அடிக்க முடியும் என்று கூறினார்.

ஆனால் கூறியது போல் தொடர்ச்சியாகவும் விளையாடாமல் இங்கிலாந்து தொடரில் மட்டும் விளையாடிவிட்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வெடுக்கும் அவர் இதுவே ஐபிஎல் தொடராக இருந்தால் இப்படி ஓய்வெடுப்பாரா என்ற விமர்சனத்தையும் சந்தித்தார். மேலும் டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக அவருக்கு மிகவும் பிடித்த ஒருநாள் போட்டிகளில் அதுவும் கத்துக்குட்டி ஜிம்பாப்வேக்கு எதிராக விளையாடினால் சதமடித்து ஃபார்முக்கு திரும்பி விடுவார் என்ற நம்பிக்கையில் அவரை இந்த தொடரில் விளையாட வைக்க தேர்வுக்குழு விரும்பியது. ஆனால் இந்தத் தொடருக்குப் பின் நடைபெறும் ஆசிய கோப்பையிலிருந்து தொடர்ச்சியாக விளையாட விராட் கோலி கேட்டுக் கொண்டதால் மீண்டும் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இன்னும் எத்தனை ஓய்வு தேவைப்படுகிறது என்று ரசிகர்கள் அவர் மீது அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

ராகுல் ஓய்வு:
இதுபோக மற்றொரு முக்கிய வீரர் கேஎல் ராகுல் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தால் விலகினார். அதனால் அயர்லாந்து, இங்கிலாந்து தொடரை முழுமையாக தவறவிட்ட அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்காக பயிற்சிகளை மேற்கொண்டு வந்த அவருக்கு கடைசி நேரத்தில் கரோனா ஏற்பட்டதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விலகுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக செயல்படுவார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் மீண்டும் கடைசி நேரத்தில் தசைப்பிடிப்பு காயத்தால் அவர் வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தென் ஆப்ரிக்க தொடரில் அவருடன் காயத்தால் வெளியேறிய குல்தீப் யாதவ் குணமடைந்து வந்து விட்டார் ஆனால் இவருக்கு மட்டும் எப்படி கடைசி நேரத்தில் காயம் ஏற்படுகிறது என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க : IND vs ZIM : சொதப்பிய அந்த இருவருக்கும் வாய்ப்பு ஆனால் அசத்திய அவருக்கு வாய்ப்பில்லையா – தேர்வுக்குழு மீது ரசிகர்கள் காட்டம்

மேலும் இந்த வருடம் ஆரம்பம் முதலே காயத்தால் இந்தியாவுக்காக இதுவரை ஒரு டி20 போட்டியில் கூட விளையாடாத அவர் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாட விரும்புகிறார் என்றும் தனது காதலியுடன் நிச்சயதார்தம் செய்யப்பட்ட நிலையில் கல்யாணம் முடியும் வரை இந்தியாவுக்காக விளையாட போவதில்லை என்றும் ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.

Advertisement