இந்திய அணியின் முழுநேர கேப்டனாக அவர் மாறினால் எனக்கு ஆச்சரியமில்லை – ஸ்காட் ஸ்டைரிஸ் பேட்டி

Scott-Styris
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டான ஹார்டிக் பாண்டியா முதுகுப் பகுதியில் செய்து கொண்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாகவே பந்து வீசாமல் இருந்து வந்தார். அதோடு அவரது பேட்டிங் பார்மும் சற்று சறுக்களை சந்திக்கவே இதோடு அவரது கரியர் முடிந்து விட்டது என்று பலரும் பேச ஆரம்பித்தனர். அதே வேளையில் ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக இந்திய அணியில் சில வீரர்கள் இடம் பிடித்து விளையாடவும் தொடங்கினர்.

- Advertisement -

ஆனால் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் காலவரையற்ற ஓய்வு எடுத்துக் கொண்ட ஹர்திக் பாண்டியா தான் மீண்டும் சிறப்பான உடல் தகுதியுடன் அணிக்கு திரும்பும் வரை தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என இந்திய அணியின் தேர்வுக்குழுவினரிடம் கேட்டுக் கொண்டார். அதனை தொடர்ந்து தீவிர பயிற்சி மற்றும் கடின உழைப்பின் மூலமாக ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுத்த பாண்டியா முதல் சீசனிலேயே கேப்டனாக குஜராத் அணியை வழிநடத்தி ஐபிஎல் கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.

அதுமட்டுமின்றி அந்த தொடரில் பேட்டிங்கிலும் டாப் ஆர்டரில் களமிறங்கி ரன்களை குவித்தார். அதோடு பந்துவீச்சிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை அள்ளினார். இப்படி ஐபிஎல் தொடரில் அசத்தலான கம்பேக் கொடுத்த பாண்டியா மீண்டும் இந்திய அணியில் இணைந்து நடைபெற்று வரும் அனைத்து தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் எதிர்வரும் டி20 உலக கோப்பையில் அவர் முக்கிய வீரராக இந்திய அணியில் இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

Hardik Pandya

அதோடு ஐபிஎல் தொடரில் அட்டகாசமான கேப்டன்சி செய்த அவருக்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு ஒரு சிலமுறை கேப்டனாக செயல்படவும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ஹார்டிக் பாண்டியா இந்திய டி20 கிரிக்கெட்டின் முழு நேர கேப்டனாக மாறினால் தனக்கு ஆச்சரியம் ஏதும் இல்லை என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்திய அணி தற்போது பல்வேறு வீரர்களை தலைமை தாங்க வைத்து அவர்களின் திறனை சோதிக்கிறது. அந்த வகையில் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக மிக அற்புதமாக செயல்படுகிறார். முதலாவதாக அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டியில் கேப்டனாக செயல்பட்ட அவர் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசிப் போட்டியிலும் கேப்டனாக செயல்பட்டார். அவர் கேப்டனாக செயல்பட்ட மூன்று போட்டியிலுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் மீண்டும் ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய மார்ட்டின் கப்தில் – புதிய சாதனை

நிச்சயம் வருங்காலத்தில் இந்திய அணியின் முழுநேர டி20 கேப்டனாக பாண்டியா மாறினால் கூட அதில் நான் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஹார்டிக் பாண்டியா தற்போது மிகச் சிறப்பான பார்மில் இருக்கிறார். தொடர்ந்து அவரால் இந்திய அணியையும் சிறப்பாக வழி நடத்த முடியும் என ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement