டி20 கிரிக்கெட்டில் மீண்டும் ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய மார்ட்டின் கப்தில் – புதிய சாதனை

Guptill-and-Rohit
- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டனா கேப்டனான ரோகித் சர்மா வைத்திருந்தார். அண்மையில் நடைபெற்று முடிந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் மார்ட்டின் கப்திலை பின்னுக்கு தள்ளி அந்த சாதனையை படைத்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணியானது அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து துவக்க வீரர் மார்ட்டின் கப்தில் 15 ரன்கள் அடித்திருந்தார்.

இதன்மூலம் மீண்டும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையில் தற்போது ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை 121 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3,497 ரன்களை அடித்துள்ளார் அதில் இரண்டு சதமும் அடங்கும்.

guptill

அவரைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 132 போட்டிகளில் விளையாடி 3,487 ரன்களுடன் 10 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இடத்தில் உள்ளார். எனவே இந்த முதல் இரண்டு இடங்களும் அவ்வப்போது மாற்றங்களை கண்டு கொண்டே வருகிறது. இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி 99 போட்டியில் 3308 ரன்கள் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் ஆசிய கண்டத்தில் உள்ள அணிகள் மட்டுமே பங்கேற்று விளையாட இருப்பதன் காரணமாக நிச்சயம் நியூசிலாந்து வீரரான மார்ட்டின் கப்திலின் சாதனையை அடுத்த போட்டியிலேயே ரோகித் சர்மா முறியடித்து மீண்டும் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார் என்பதில் சந்தகமில்லை.

இதையும் படிங்க : அந்த தங்கத்த டி20 உ.கோ அணியில் பார்சல் பண்ணுங்க – வித்யாச சாதனை படைத்து வரும் இளம் இந்திய வீரர்

அதே வேளையில் பார்மை இழந்து தற்போது தவித்து வரும் விராட் கோலியும் இந்த ஆசிய கோப்பை தொடரில் ரன்களை விளாச துவங்கினால் அவர் ரோகித்தை முந்த வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement