
ஹர்திக் பாண்டியா இந்திய டி20 கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படாதது சர்ச்சையையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. ஏனெனில் 2022 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் ரோஹித் சர்மா ஓய்வெடுத்த பெரும்பாலான டி20 தொடர்களில் இந்தியாவை வழி நடத்தினர். அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பையில் துணை கேப்டனாக செயல்பட்ட அவர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
அதனால் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பின் ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் அவர் ஃபிட்டாக இல்லை என்று சொல்லி சூரியகுமார் யாதவை புதிய கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார். அதனால் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்த துணை கேப்டன்ஷிப் பதவியையும் பறித்துள்ள தேர்வுக்குழு சுப்மன் கில்லை புதிய கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது.
நல்ல முடிவு:
இந்நிலையில் சமீப காலங்களில் காயத்தால் அடிக்கடி விளையாடாத பாண்டியா அழுத்தமான கேப்டன்ஷிப் பொறுப்பு இல்லாமல் இருப்பதே சிறந்தது என முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் ஷமி, பும்ரா ஆகியோரும் காயம், பணிச்சுமையால் தொடர்ந்து விளையாடாத நிலையில் பாண்டியாவும் இல்லாமல் போனால் அது இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணியை பலவீனமாக்கி விடும் என்று அவர் கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தனிப்பட்ட முறையில் நானும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக அறிவித்திருக்க மாட்டேன். அவர் ஆல்ரவுண்டர் என்பதே அதற்கான ஒரு காரணம். திறமையின் அடிப்படையில் அவர் இந்தியாவின் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர். ஆனால் அவர் தொடர்ச்சியாக ஃபிட்டாக இருப்பதை நீங்கள் விரும்புகிறீர்கள்”
“தற்சமயத்தில் அவர் காயத்தால் எப்படி உள்ளேயும் வெளியேயும் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பந்து வீசுவது மிகவும் கடினம். அது உங்களுடைய உடலில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கேப்டன்ஷிப் பொறுப்பை சேர்ப்பது நல்ல விஷயமல்ல. ஏனெனில் அதற்கு இன்னும் அதிகமாக வேலை செய்ய வேண்டும். எனவே ஹர்திக் பாண்டியா தன்னுடைய பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதை நான் விரும்புகிறேன்”
இதையும் படிங்க: 31 ரன்ஸ் 7 விக்கெட்ஸ்.. அசத்திய இந்தியா.. டபுள் ஹாட்ரிக் டக்.. இலங்கையின் சனாக்கா படுமோசமான உலக சாதனை
“கேப்டன்ஷிப் பற்றி பின்னர் பார்த்துக் கொள்ளலாம். அனைத்து நேரங்களில் பும்ரா அணியில் இருப்பதில்லை. அது உங்களுடைய அணியை பலவீனமாக்குகிறது. எனவே நீங்கள் ஹர்திக் பாண்டியா இருப்பதை விரும்புவீர்கள். அதனாலேயே அவரை கேப்டனாக நியமிக்காத முடிவை நான் விரும்புகிறேன். ஏனெனில் அவர் மற்ற வேலைகளை விட பந்து வீச்சில் டாமினேட் செய்து உயர்ந்து நிற்பதை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார்.