இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த சவுரவ் குமார். யார் இவர்? – இந்திய அணியில் தேர்வாக என்ன காரணம்?

Saurabh kumar 1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரானது தற்போது கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்ததும் இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த இரு தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.

IND

- Advertisement -

அதன்படி டி20 போட்டிகள் வரும் 24, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் லக்னோ மற்றும் தர்மசாலா மைதானங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அதனைத் தொடர்ந்து மார்ச் 4-ஆம் நாள் முதல் 8-ஆம் நாள் வரை முதலாவது டெஸ்ட் போட்டியும், மார்ச் 12 முதல் 16 வரை பெங்களூருவில் இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெறும் என்று முடிவாகியுள்ளது.

அதிலும் குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் 28 வயதான சவுரவ் குமார் என்கிற வீரருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

Saurabh-kumar

ஏற்கனவே அணியில் ஜடேஜா, அஷ்வின் மற்றும் குல்தீப் என மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும் வேளையில் இவரைத் தேர்வு செய்தது ஏன் என்று ரசிகர்கள் தேடி வருகின்றனர். அந்த வகையில் அதற்கான விளக்கத்தை உங்களுக்காக நாங்கள் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சவுரவ் குமார் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் என்பது மட்டுமின்றி இடதுகை பேட்ஸ்மேன் ஆவார்.

- Advertisement -

2015-ஆம் ஆண்டு முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 304 ரன்கள் அடித்து மட்டுமின்றி 17 விக்கெட்டுகளையும் அவரது அறிமுக ரஞ்சித் தொடரிலேயே கைப்பற்றி அசத்தினார். அதோடு 2017-18 ரஞ்சி கோப்பையில் உத்தரப்பிரதேச அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை 23 விக்கெட்டுகளுடன் பெற்றார். மேலும் கடந்த முறை 2019-20 ஆண்டின் ரஞ்சிப் போட்டியில் 44 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : கேப்டனாக இருந்தாலும் இப்படியா நடந்துக்குறது? கேப்டன் ரோஹித் மீது எழும் கண்டனம் – என்ன நடந்தது

இதுவரை முதல்தர கிரிக்கெட்டில் 46 போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கிலும் 8 அரை சதங்கள் 2 சதங்கள் என 1572 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். இதன் காரணமாகவே அவரை ஒரு ஆல்-ரவுண்டராக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இருப்பினும் அவருக்கான வாய்ப்பு கிடைக்குமா என்றால் அது சந்தேகமே. சவுரவ் குமார் ஏற்கனவே கடந்த 2017-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான புனே ஐ.பி.எல் அணியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement