- Advertisement -
உலக கிரிக்கெட்

போட்டிக்கு நடுவே தூங்கிய பாக் வீரருக்கு ஏற்பட்ட பரிதாபம்.. மோசமான சாதனை நிகழ்வு – விவரம் இதோ

சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றின் முடிவிலேயே வெளியேறியது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. நடப்பு சாம்பியனாக இருக்கும் பாகிஸ்தான் அணி இம்முறை நிச்சயம் கோப்பையை தக்க வைக்கும் என்று பலராலும் பேசப்பட்டது.

இப்படி அவுட்டாகும் முதல் பாகிஸ்தான் வீரர் இவர்தான் :

இவ்வேளையில் அவர்கள் அடைந்த தோல்வி அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. மேலும் பாகிஸ்தான் அணியில் இருந்து சில வீரர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக துடிப்பான இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வரவேண்டும் என்ற பேச்சுக்களும் எழுந்து வந்தன.

- Advertisement -

அந்த வகையில் எதிர்வரும் தொடர்களில் பாகிஸ்தான் அணியில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் அந்த அணியின் நட்சத்திர வீரரான சவுத் ஷகீல் தூங்கிய விவகாரம் தற்போது பலரது மத்தியிலும் கேலியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வரும் சௌத் ஷகீல் தற்போது உள்ளூர் தொடர் ஒன்றில் ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். இந்த தொடரின் ஒரு போட்டியின் போது களத்தில் இருந்த பேட்ஸ்மேன் அவுட்டாகி சவுத் ஷகீல் மூன்று நிமிடங்களுக்குள் மைதானத்திற்குள் வரவில்லை என்பதனால் டைம்டு அவுட் முறையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

இதற்கான காரணம் என்ன என்று பார்க்கும் போது சவுத் ஷகீல் போட்டியின் இடையே படுத்து தூங்கியதால் அவரால் விரைவில் தூக்கத்திலிருந்து எழ முடியவில்லை என்றும் அதனால் அவர் பேட்டிங் செய்ய வர முடியாமல் போனதும் தெரிய வந்துள்ளது. இப்படி போட்டியிடையே தூக்கத்தால் டைம்டு டவுட் முறையில் ஆட்டமிழந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற மோசமான சாதனையை சவுத் ஷகீல் படைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : இந்தியாவுக்காக சிரிக்கிற மாதிரி முட்டாள்தனத்தை செய்யலாமா? ஐசிசியை விமர்சித்த டேவிட் லாய்ட்

ஏற்கனவே பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளால் தடுமாறி வரும் வேளையில் நட்சத்திர வீரரான இவர் இப்படி களத்திற்கு வராமல் தூங்கிய சம்பவம் பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியிலும் கிண்டலான விடயமாக பகிரப்பட்டு வருகிறது.

- Advertisement -