இந்தியாவுக்காக சிரிக்கிற மாதிரி முட்டாள்தனத்தை செய்யலாமா? ஐசிசியை விமர்சித்த டேவிட் லாய்ட்

David Llyod
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் வரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. ஆனால் அதில் எல்லைப் பிரச்சனை காரணமாக பாகிஸ்தானுக்கு செல்லாத இந்திய அணி தங்களது போட்டிகளை துபாயில் விளையாடி வருகிறது. 2008 முதலே எல்லைப் பிரச்சினை காரணமாக பாகிஸ்தானுக்கு செல்வதை இந்தியா முற்றிலும் நிறுத்தியுள்ளது. அதனால் இம்முறை இந்தியா துபாயில் விளையாடும் என்று ஐசிசி அறிவித்தது.

அப்போது யாருமே இது பற்றி எந்த விமர்சனத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் துபாயில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றதும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக ஒரே ஹோட்டலில் தங்கி,ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத சாதகத்தை கொடுத்திருப்பதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் மைக்கேல் ஆதர்டன், நாசர் ஹுசைன் விமர்சித்தனர்.

- Advertisement -

மற்றொரு விமர்சனம்:

ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் இந்தியாவுக்கு அப்பட்டமான சாதகம் இருப்பதாக தெரிவித்தார். அந்த சாதகத்தைப் புரிந்து கொள்வது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் அல்ல என்று தென்னாபிரிக்க வீரர் ராசி வேன் டெர் டுஷன் தெரிவித்தார். அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாய்ட் இந்தியாவுக்காக சிரிக்கக் கூடிய முட்டாள்தனமான முடிவை ஐசிசி எடுத்துள்ளதாக விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உலக கிரிக்கெட்டின் மிக உயர்ந்த முக்கியமான ஒரு தொடரில் இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் சங்கடமானது. ஒருதலைபட்சமாக தொடர் நடத்தப்படுவது கேலிக்குரியவை. நீங்கள் இவ்வாறு செய்வது சிரிப்பைக் கொடுக்கிறது. அதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இது முட்டாள்தனமானது”

- Advertisement -

2019இல் சிரிப்பு வரலையா:

“இந்த ஐசிசி தொடர் இப்படி நடத்துவதை இதைத் தவிர்த்து என்னால் வேறு விதமாக வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஏனெனில் நீங்கள் அணிகளை அங்கேயும் இங்கேயும் வர வைக்கிறீர்கள். செமி ஃபைனலுக்கு துபாய்க்கு வந்த அணிகள் மீண்டும் அங்கே செல்ல நேரிடுகின்றன. நான் மிகவும் நகைச்சுவையான நபர். ஆனால் இப்படி செய்யப்பட்டுள்ளது மிகவும் வேடிக்கையானது” எனக் கூறினார்

இதையும் படிங்க: இந்தியாவால் அலைஞ்சது தெ.ஆ தோற்க ஒரு காரணம்.. என் சப்போர்ட் நியூஸிலாந்துக்கே.. மில்லர் சோகமான பேட்டி

முன்னதாக 2019 உலகக்கோப்பை ஃபைனலில் நியூசிலாந்து தோற்காத போதும் பௌண்டரிகளை அதிகமாக அடித்தது என்ற முட்டாள்தனமான விதிமுறையை வைத்து ஐசிசி இங்கிலாந்துக்கு கோப்பையை கொடுத்தது. அப்போதெல்லாம் இதை இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் பெருமையுடன் கோப்பையை முத்தமிட்டனர். மேலும் 2008இல் பாகிஸ்தானில் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது முதல் இதே இங்கிலாந்தினர் 10 வருடங்களாக அந்நாட்டிற்கு செல்லாமல் துபாயில் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement