எல்லாரும் நான் குண்டா இருக்குறது பத்தி பேசுறாங்க. ஆனா நான் பண்ற பிராக்டீஸ் பத்தி தெரியுமா ? – சர்பராஸ் கான் உருக்கம்

Sarfaraz Khan
- Advertisement -

இந்திய அணியில் எப்படியாவது இடம்பெற வேண்டும் என்று உள்ளூர் கிரிக்கெட்டில் கடுமையாக போராடி வருபவர் சர்பராஸ் கான். தற்போது 25 வயதை எட்டியுள்ள சர்பராஸ் கான் 19 வயது உட்பட்டோர் உலகக்கோப்பை அணியில் இருந்து தொடர்ச்சியாக இந்திய அணிக்காக எப்படியாவது தேர்வாகிவிட வேண்டும் என்று இன்றளவும் உழைத்து வருகிறார். ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட், விஜய் ஹசாரே தொடர், சையத் முஷ்டாக் அலி என அனைத்து தொடர்களிலுமே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் ரஞ்சி கிரிக்கெட்டில் டான் பிராட்மேனுக்கு அடுத்து அதிக சராசரியை வைத்திருக்கும் வீரர் என்ற பெருமையும் படைத்திருக்கிறார்.

Sarfaraz Khan 1

- Advertisement -

தொடர்ச்சியாக ரஞ்சி கிரிக்கெட்டில் அசத்திவரும் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாகவும் இருந்து வருகிறது. ஆனால் அவரது உடல் பருமன் காரணமாக தொடர்ந்து அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்க தேர்வு குழுவினர் மறுத்து வருகின்றனர். இப்படி தேர்வு குழுவினர் சிறப்பாக விளையாடி வரும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பேசியிருந்த கவாஸ்கர் கூட : ஒரு வீரரின் உடல் அமைப்பு பற்றி தேர்வு குழுவினர் அதிகம் யோசிக்க கூடாது. ஒல்லியான வீரர் தான் வேண்டுமென்றால் பேஷன் ஷோக்கு செல்லுங்கள் என்று காட்டமாக பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தனது உடல் பருமன் குறித்தும், தனது பிராக்டீஸ் குறித்தும் மனம்திறந்த பேட்டி ஒன்றினை அளித்துள்ள சர்பராஸ் கான் பேசுகையில் உருக்கமான பல நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : எனது உடல் பருமன் குறித்து நிறைய பேச்சுக்கள் எழுந்து வருவதை பற்றி நான் படித்து வருகிறேன். ரஞ்சி கிரிக்கெட்டில் மிகவும் பிசியாக விளையாடிக் கொண்டிருந்தாலும் என்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதை அப்போது நான் பார்த்து வருகிறேன். ஒவ்வொரு வீரருக்கும் உடற்தகுதி என்பது மிகவும் முக்கியம் அது எனக்கும் தெரியும். அதற்காக நான் கடுமையாக உழைத்து வருகிறேன்.

sarfaraz 2

கடந்த ரஞ்சி சீசனில் கூட நான் முழுவதுமாக விளையாடிவிட்டு வீடு திரும்பும் போது இரவு 2 மணி ஆகிவிட்டது. ஆனாலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் நான் மீண்டும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து என்னுடைய பயிற்சியை தொடங்கிவிட்டேன். கிரிக்கெட்டிற்காக எனது உடற்தகுதி தற்போது சிறப்பாகவே உள்ளதாக உணர்கிறேன். ஏனெனில் முன்பை விட தற்போது நான் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளேன்.

- Advertisement -

டெல்லி அணி நடத்திய 14 நாட்கள் பயிற்சி முகாமில் கூட கலந்து கொண்டு என்னால் என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்திருக்கிறேன். மேலும் அவர்கள் வைத்த பயிற்சி அனைத்திலும் நான் சிறப்பாகவும் செயல்பட்டு இருக்கிறேன். என்னுடைய உடற்பருமனை மட்டுமே பேசுகிறார்கள். அதைதவிர்த்து என்னுடைய கடின உழைப்பையும், பிராக்டீசையும் பற்றி யாரும் பேசுவது கிடையாது. தற்போது நான் நல்ல பேட்டிங் பார்மில் இருக்கிறேன். அதுமட்டும் இன்றி களத்தில் ஓடும் பொழுதும் என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது.

இதையும் படிங்க : IPL 2023 : சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் மேட்ச் பாக்கப்போறீங்களா? அப்போ கண்டிப்பா இதை படிங்க – ரசிகர்களுக்கான கட்டுப்பாடுகள்

முடிந்த அளவு என்னிடம் உள்ள திறனை எனது அணிக்காக வெளிக்கொணர காத்திருக்கிறேன். சில வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்க தாமதமாகும். சூரியகுமார் யாதவை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் அவர் மிகவும் தாமதமாக இந்திய அணிக்காக தேர்வானார். அதேபோன்று என்னைப் பற்றி பல கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு வந்தாலும் நிச்சயம் இந்திய அணியில் நான் என்னுடைய கடின உழைப்பின் மூலம் இடம்பெறுவேன் என சர்பராஸ் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement