IPL 2023 : சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் மேட்ச் பாக்கப்போறீங்களா? அப்போ கண்டிப்பா இதை படிங்க – ரசிகர்களுக்கான கட்டுப்பாடுகள்

Chepauk Chennai Cricket Stadium
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது வரும் மார்ச் 31-ஆம் தேதி துவங்கி மே 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்கிறது என்பதனாலும் இந்த அணிகள் அனைத்தும் உள்ளூர் மைதானம் மற்றும் வெளியூர் மைதானங்களில் லீக் போட்டிகளில் விளையாடுகிறது என்பதாலும் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை பெற்றுள்ளது. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ள வேளையில் தற்போது அனைத்து நகரங்களைச் சேர்ந்த ரசிகர்களும் தங்களது நகரில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை காண டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.

MI vs CSK Ms Dhoni Rohit Sharma

- Advertisement -

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் பங்கேற்கவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை மார்ச் 27-ஆம் தேதி காலை நடைபெறவுள்ளது. சிதம்பரம் ஸ்டேடியத்தில் மொத்தம் 7 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ள வேளையில் ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெற இருக்கும் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் நாளை மார்ச் 27-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனை நடைபெறும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. குறைந்தபட்ச விலை 1500 ரூபாய் முதல் 3000 வரை டிக்கெட்டின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கான பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள தமிழக கிரிக்கெட் வாரியம் என்னென்ன விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி செல்போன் தவிர மற்ற மின்னணு சாதனங்களை மைதானத்திற்கு கொண்டு செல்ல அனுமதி கிடையாது என்று கண்டிப்பான விதிமுறையை அமல்படுத்தி உள்ளது. அதேபோன்று ஹெல்மெட், லேப்டாப், குடை, பிற பைகள் என மைதானத்திற்குள் எந்த பொருளும் அனுமதிக்க படாது.

Chepauk

மேலும் மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் கொண்டுவரும் பொருட்களை வைக்க லாக்கர் வசதி எதுவும் இல்லை என்பதனால் எந்த பொருளையும் மைதானத்திற்குள் கொண்டு வரக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோன்று டிக்கெட்டுகளில் குறிப்பிட்டுள்ள நுழைவு வாயிலை கவனமாக பார்த்து அந்த நுழைவாயில் வழியாகவே மைதானத்திற்குள் செல்ல வேண்டும் என்றும் மைதானத்திற்குள் செல்லும் நபர்கள் வெளியே வந்தால் மறுபடியும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் உறுதியாக கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

நேரடியாக டிக்கெட் வாங்குவதோ அல்லது ஆன்லைன் வாயிலாக டிக்கெட் வாங்கினாலோ சரி ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட் மட்டுமே வழங்கப்படும். அதோடு மைதானத்தில் பீடி, சிகரெட், குட்கா, பான் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மைதான வளாகத்தில் பிளாஸ்டிக் பைகள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது. போட்டி துவங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாக நுழைவாயில் திறக்கப்படும் என்றும் ஒருமுறை உள்ளே நுழைந்த பிறகு வெளியில் சென்று விட்டால் மீண்டும் உள்ளே வர அனுமதி இல்லை. டீ, காபி, குளிர்பானங்கள், உணவு என எதையும் கொண்டு செல்லக்கூடாது.

இதையும் படிங்க : எனக்கு ஐ.பி.எல் தொடரை விட எங்க நாட்டுக்காக விளையாடுறதுதான் முக்கியம் – அதிரடியாக வெளியேறிய நட்சத்திர வீரர்

வெளியில் இருந்து வரும் உணவு டெலிவரிகளுக்கும் அனுமதி கிடையாது என்று குறிப்பிட்டுள்ளது. அதேபோல அனைத்து ஸ்டாண்டிலும் இலவச குடிநீர் வசதி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் அந்த பகுதிகளுக்கு சக்கர நாற்காலியின் மூலமாகவும் செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement