நான் செலக்டரா இருந்தா முதல் ஆளா அவரை 2024 டி20 உ.கோ அணியில் எடுப்பேன்.. பீட்டர்சன் மெசேஜ்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2024 டி20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதில் இந்தியாவுக்காக விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவதற்கு சஞ்சு சாம்சன், கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரிடம் கடுமையான போட்டி காணப்படுகிறது. இதற்கிடையே தினேஷ் கார்த்திக், இசான் கிசான் போன்ற வீரர்களும் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு போட்டியிட்டு வருகின்றனர்.

அதில் ரிசப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் 2024 ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி இதுவரை இருவரும் தலா 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளனர். இருப்பினும் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் 3வது இடத்தில் 385 ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால் இந்திய அணியில் 3வது இடத்தில் விராட் கோலி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பீட்டர்சன் ஆதரவு:
மறுபுறம் காயத்திலிருந்து குணமடைந்த ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காக 4, 5 போன்ற மிடில் ஆர்டரில் விளையாடி வருகிறார். எனவே கடைசியாக உலகக் கோப்பை அணியில் ரிசப் பண்ட் தேர்வு செய்யப்படுவதற்கு அதிகப்படியான வாய்ப்புள்ளது. ஏனெனில் கடந்த காலங்களில் ஓரளவு நன்றாக விளையாடியும் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததை பற்றி யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்திய காரணத்திற்காக டி20 கிரிக்கெட்டில் சுமாராக விளையாடியும் ரிசப் பண்ட் நிறைய வாய்ப்புகள் பெற்றதையும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்நிலையில் தாமாக இருந்தால் சஞ்சு சாம்சனை முதல் ஆளாக 2024 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் தேர்ந்தெடுப்பேன் என முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “சஞ்சு சாம்சன் செல்ல வேண்டும். இன்னும் சில வாரங்களில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவுக்கு செல்லவிருக்கும் இந்திய அணியின் விமானத்தில் அவர் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் ஒரு கேப்டனாக இருந்தும் கௌரவங்கள் வழங்கப்படவில்லை என்ற அழுத்தத்துடன் நிறைய போராடுகிறார்”

இதையும் படிங்க: இவர் தான் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தங்கம்.. ராஜஸ்தான் வீரருக்கு ரவி சாஸ்திரி பாராட்டு

“அவர் ரன் எடுக்கும் விதம் மற்றும் பேட்டிங் செய்யும் சூழ்நிலை சிறப்பாக இருக்கிறது. எனவே நான் தேர்வாளராக இருந்தால் எனது முதல் தேர்வுகளில் அவர் ஒருவராக இருப்பார்” என்று சொல்லி இந்திய தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கருக்கு மெசேஜ் கொடுத்துள்ளார். இந்த நிலையில் சஞ்சு சாம்சன் தலைமையில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் 8 போட்டிகளில் வென்று பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இப்போதே 90% உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement