125 கோடி பேரில் ஒருவராக நான் விளையாடுறது அவரோட ஆசை – சர்பராஸ் கான் நெகிழ்ச்சி

Sarfaraz-Khan
- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்படும் போதெல்லாம் சர்பராஸ் கானின் பெயர் அடிபடும். ஆனால் அவருக்கு வாய்ப்பே வழங்கப்படாமல் இருந்து வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ரன்களை வாரி குவித்து வரும் சர்பராஸ் கானுக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை? என்று ரசிகர்கள் தரப்பிலும் ஆதரவு பெறுகியது. அதோடு முன்னாள் வீரர்கள் பலரும் ஆதரித்து அவருக்கு வாய்ப்பு வழங்குமாறு வெளிப்படையாகவே தெரிவித்து வந்தனர்.

அந்த வகையில் ஏற்கனவே முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறுகையில் : உங்களுக்கு பார்ப்பதற்கு ஸ்லிம்மாக இருப்பவர்கள் தான் வேண்டுமென்றால் பேஷன் ஷோவிற்கு செல்லுங்கள் என பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவை கடுமையாக சாடியிருந்தார். அதேபோன்று தென்னாப்பிரிக்க வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கூறுகையில் :

- Advertisement -

கடந்த மூன்று ஆண்டுகளாக 69 ரன்கள் சராசரியுடன் மலை போல் குவித்து வருகிறார். இது சாதாரண விடயம் கிடையாது. யாருக்காவது வாய்ப்பு வழங்க வேண்டும் என நினைத்தால் முதலில் அவருக்கு வாய்ப்பு வழங்குங்கள் என்று தெரிவித்திருந்தார். இப்படி தொடர்ச்சியாக ஆதரவுகள் குவிந்து வந்த வேளையில் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ரன்களை குவித்து வந்த சர்பராஸ் கான் இந்திய ஏ அணிக்காகவும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் ஒரு வழியாக தற்போது கே.எல் ராகுல் அணியில் இருந்து வெளியேறியதும் அவருக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வாய்ப்புக்காக தான் காத்திருந்ததை நினைத்து தற்போது தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ள சர்ஃபராஸ் கான் கூறுகையில் :

- Advertisement -

நான் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டதில் என்னை விட என் தந்தை தான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார். என்னுடைய பேட்டிங் பலம் சிறப்பாக இருப்பதற்கு காரணமே என்னுடைய தந்தை தான். அவர்தான் என்னை கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தினார். முதலில் நான் அதிரடி பேட்ஸ்மேனாக இருந்தேன். அப்போதெல்லாம் விரைவாகவே ஆட்டமிழந்து வெளியேறிவிடுவேன். அதனால் என்னால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியாது.

இதையும் படிங்க : கடலில் தொலைஞ்ச இந்தியாவை சாய்க்க.. அந்த செண்டிமெண்ட்டை பாக்காதீங்க.. இங்கிலாந்துக்கு அலெஸ்டர் குக் அட்வைஸ்

அப்போது மற்ற வீரர்களை போன்று நம்மால் நீண்ட நேரம் விளையாட முடியவில்லையே என்று வருத்தப்பட்டேன். ஆனால் என்னுடைய தந்தை தான் எனக்கு நம்பிக்கை அளித்து ஊக்குவித்து மிகச் சிறப்பான பேட்ஸ்மேனாக மாற்றியுள்ளார் என சர்பராஸ் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement