கடலில் தொலைஞ்ச இந்தியாவை சாய்க்க.. அந்த செண்டிமெண்ட்டை பாக்காதீங்க.. இங்கிலாந்துக்கு அலெஸ்டர் குக் அட்வைஸ்

Alastair Cook
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்தை விட சிறப்பாக விளையாடிய இந்தியா 190 ரன்கள் முன்னிலை பெற்று வெற்றியை பாக்கெட்டில் வைத்திருந்தது.

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஓலி போப் 196 ரன்கள் குவித்த உதவியுடன் தம்பிய இங்கிலாந்து 231 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்யவிடாமல் 7 விக்கெட்டுகள் எடுத்த டாம் ஹார்ட்லி இந்தியாவை 202 ரன்களுக்கு சுருட்டி இங்கிலாந்துக்கு வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில் அந்த தோல்வியால் கடலில் தொலைந்த மனிதனைப் போல் இந்தியா இருப்பதாக முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் கூறியுள்ளார்.

- Advertisement -

செண்டிமெண்ட் வேண்டாம்:
எனவே ஐபிஎல் தொடரின் போது நட்பாக விளையாட வேண்டுமே என்ற சென்டிமென்ட்டை வைத்து இந்திய வீரர்களிடம் இங்கிலாந்து அணியினர் கருணை பார்க்காமல் விளையாட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதை செய்தாலே எளிதாக இத்தொடரை வெல்லலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி டிஎன்டி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“இந்த தொடரில் அதிக போட்டிகளில் விளையாடாத வீரர்கள் நல்ல கிரிக்கெட்டர்களாக செயல்பட்டனர். ஒருவேளை முதல் போட்டியில் சாதாரணமான அனுபவிக்க வீரர்கள் விளையாடியிருந்தால் கூட தோல்வியை சந்தித்திருப்பார்கள். ஆம் முதல் போட்டியில் ஒருவர் அபாரமான இன்னிங்ஸ் விளையாடி வெற்றி பெற வைத்தார். ஆனால் அது போல் விளையாடும் திறமை தற்போதைய இங்கிலாந்து அணியில் 4 – 5 பேட்ஸ்மேன்களிடம் உள்ளது”

- Advertisement -

“இந்தியா தங்களுடைய அணியில் மகத்தான வீரர்களை கொண்டுள்ளது. ஆனால் அவர்களுடைய ஸ்டேட்டஸ் மற்றும் ஐபிஎல் தொடரில் கிடைக்கும் பணம் ஆகியவற்றால் நீங்கள் அவர்களை கடவுள்களாக பார்ப்பீர்கள். இப்போதே அவர்கள் கடவுள்களாக போற்றப்படுகின்றனர். அது உங்களுடைய மனதில் சில நேரங்களில் விளையாடும். தற்சமயத்தில் இந்திய அணியினர் சற்று கடலில் தொலைந்தவர்கள் போல் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: ஏபிடி, கோலியை ஃபாலோ பண்றேன்.. அந்த பாகிஸ்தான் ஜாம்பவான் ஆடுறேன்ன்னு அப்பா சொல்வாரு.. சர்பராஸ் பேட்டி

“ஏனெனில் 190 ரன்கள் முன்னிலை பெற்ற போட்டிகளில் பொதுவாக அவர்கள் வெற்றிகளை ருசிப்பார்கள். சொந்த மண்ணில் கடந்த 40 போட்டிகளில் அவர்கள் வெறும் 3 தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளனர். ஆனால் திடீரென சந்தித்துள்ள இந்த தோல்வியால் “கடவுளே இது நீடிக்கக் கூடாது” என்று இந்தியா நினைப்பார்கள்” எனக் கூறினார். முன்னதாக வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் கடைசியாக டெஸ்ட் தொடரில் (2012இல்) தோற்கடித்த கேப்டன் என்ற மாபெரும் சாதனைக்கு அலெஸ்டர் குக் சொந்தமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement