ஏபிடி, கோலியை ஃபாலோ பண்றேன்.. அந்த பாகிஸ்தான் ஜாம்பவான் ஆடுறேன்ன்னு அப்பா சொல்வாரு.. சர்பராஸ் பேட்டி

Sarfaraz Khan 4
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் துவங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்தியா 2வது போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் விளையாட உள்ளது. அந்த போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயத்தால் விலகியுள்ளது இந்தியாவிற்கு மற்றுமொரு பின்னடைவாக அமைந்துள்ளது.

இருப்பினும் அதன் காரணமாக ரஜப் படிடார் அல்லது சர்பராஸ் கான் ஆகியோரில் ஒருவருக்கு அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சர்பராஸ் கான் இந்திய அணியில் தேர்வானதற்கு ஏராளமான ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றே சொல்லலாம். ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் 69.85 என்ற அபாரமான சராசரியில் ரன்களை குவித்து வரும் அவர் இந்தியாவுக்காக விளையாட போராடி வருகிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் வீரர் மாதிரி:
அதன் பயனாக தற்போது தேர்வாகியுள்ள அவர் விராட் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ், விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற ஜாம்பவான்களை பார்த்து தம்முடைய பேட்டிங்கில் முன்னேறி வருவதாக கூறியுள்ளார். அத்துடன் பாகிஸ்தான் ஜாம்பவான் ஜாவேத் மியான்தத் போல தாம் பேட்டிங் செய்வதாக தம்முடைய தந்தை அடிக்கடி கூறுவார் என்று தெரிவிக்கும் சர்ஃபராஸ் கான் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு.

“கிரிக்கெட்டில் என்னுடைய தந்தை என்னை அறிமுகப்படுத்தினார். இயற்கையாக நான் அட்டாக் செய்யக்கூடிய பேட்ஸ்மேன் என்பதால் விரைவாக அவுட்டாகி விடுவேன். அதனால் பெரிய ரன்கள் அடிப்பது கடினமாக இருக்கும். அப்போது மற்றவர்கள் அசத்தும் போது என்னால் ரன்கள் அடிக்க முடியாததை பார்ப்பது அவருக்கு வேதனையாக இருக்கும். மும்பையில் இருந்து உத்தரப்பிரதேசம் சென்ற பின்னர் கூட அவர் நான் விளையாடுவதை பார்ப்பதற்காக விமானத்தில் வருவார்”

- Advertisement -

“நான் எளிதாக திருப்தியடைய மாட்டேன் என்பதே என்னுடைய பலமாகும். அதனால் ஒவ்வொரு நாளும் 500 – 600 பந்துகள் எதிர்கொள்வேன். அதே காரணத்தால் ஒரு போட்டியில் 200 – 300 பந்துகளை எதிர்கொள்ளாவிட்டால் நான் நன்றாக உணர மாட்டேன். எனவே 3 நேரமும் பயிற்சிகள் எடுப்பதே என்னுடைய பொழுதுபோக்காகும். அந்த வகையில் நான் நாள் முழுவதும் கிரிக்கெட்டில் விளையாடுவேன். அதனால் களத்தில் என்னால் நீண்ட நேரம் நிலைத்து விளையாட முடியும்”

இதையும் படிங்க: இந்திய அணிக்கு விழும் அடுத்தடுத்த அடி.. 3வது போட்டியில் ஷமி, கோலி, ஜடேஜா, ராகுல் விளையாடுவார்களா?

“நான் விராட் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ், ரிச்சர்ட்ஸ் ஆகியோர் விளையாடுவதை பார்ப்பேன். சொல்லப்போனால் ஜாவேத் மியான்தத் விளையாடுவதையும் பார்க்க விரும்புவேன். ஏனெனில் நான் அவரைப் போல் விளையாடுவதாக என்னுடைய அப்பா சொல்வார். அதே போல ஜோ ரூட் பேட்டிங்கையும் பார்ப்பேன். பொதுவாக சிறப்பாக விளையாடும் யாராக இருந்தாலும் அவர்களை பார்த்து என்னுடைய ஆட்டத்தை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறேன். அதை வருங்காலங்களில் தொடர்ந்து செய்ய முயற்சிப்பேன்” என்று கூறினார்.

Advertisement