இந்திய அணிக்கு விழும் அடுத்தடுத்த அடி.. 3வது போட்டியில் ஷமி, கோலி, ஜடேஜா, ராகுல் விளையாடுவார்களா?

Team India Players
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த ஊரில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் கையில் வைத்திருந்த வெற்றியை கடைசி நேரத்தில் சொதப்பிய இந்தியா எதிரணிக்கு தாரை வார்த்தது. எனவே விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாட உள்ளது.

இருப்பினும் அந்த போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய 2 முதுகெலும்பு வீரர்கள் காயத்தால் வெளியேறியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. அதற்கு முன்பாகவே முதன்மை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயத்தால் முதலிரண்டு போட்டிகளில் சேர்க்கப்படவில்லை. அதே போல நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் சொந்த காரணங்களுக்காக முதலிரண்டு போட்டிகளில் கடைசி நேரத்தில் விலகினார்.

- Advertisement -

அப்டேட் என்ன:
அந்த வகையில் 4 முக்கியமான வீரர்கள் இத்தொடரில் விளையாடாததை பயன்படுத்தி இந்திய அணியை இங்கிலாந்து ஆட்டிப் பார்த்து வருகிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்த 4 வீரர்களும் மூன்றாவது போட்டியிலாவது விளையாடுவார்களா என்பது பற்றிய தகவல் பிரபல க்ரிக்பஸ் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் படி தற்போது பெங்களூருவில் உள்ள என்சிஏவில் சிகிச்சை பெற்று வரும் ஜடேஜா குணமடைவதற்கு 2 – 4 வாரங்கள் தேவைப்படும் என்று தெரிய வருகிறது.

அதனால் இங்கிலாந்துக்கு எதிரான 3வது போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்பது தெரிய வந்துள்ளது. மறுபுறம் ஏற்கனவே லேசான காயத்துடன் 2023 உலகக் கோப்பையில் விளையாடி பட்டையை கிளப்பிய முகமது ஷமி அதிலிருந்து குணமடைவதற்காக சமீபத்திய தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் விலகினார். தற்போது அதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ள அவர் குணமடைந்து வருகிறார்.

- Advertisement -

எனவே அதற்கு இன்னும் ஒரு மாத காலம் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து மொத்தமாக ஷமி விலக உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. மேலும் லேசான காயத்தால் மட்டும் விலகிய கேஎல் ராகுல் 3வது போட்டியில் குணமடைந்து விளையாடுவார் என்பது மட்டுமே இந்திய அணிக்கு ஆறுதலான செய்தியாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: பெரிய மேட்ச்ல சொதப்பிடுவாரு.. சான்ஸ் கொடுக்கும் முன் யோசிங்க.. இந்திய அணியை எச்சரித்த தீப் தாஸ்குப்தா

குறிப்பாக 2 மற்றும் 3வது போட்டிக்கு இடையே 9 நாட்கள் இருப்பதால் அதற்குள் அவர் குணமடைந்து விளையாடுவதற்கு பிரகாச வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இறுதியாக விராட் கோலி காயத்தை சந்திக்காவிட்டாலும் சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளார். தற்போது வெளிநாட்டில் இருக்கும் அவர் பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின் படி முதல் 2 போட்டிகளில் மட்டுமே விலகியுள்ளார். எனவே 9 நாட்கள் கழித்து நடைபெறும் 3வது போட்டியில் அவர் விளையாடுவார் என்று நம்பப்படுகிறது.

Advertisement