பெரிய மேட்ச்ல சொதப்பிடுவாரு.. சான்ஸ் கொடுக்கும் முன் யோசிங்க.. இந்திய அணியை எச்சரித்த தீப் தாஸ்குப்தா

Deep dasGupta 3
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 2வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி இரண்டாம் தேதி துவங்குகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த பெரிய தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா 2வது போட்டியில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் களமிறங்குகிறது. இருப்பினும் அதில் கே.எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயத்தால் வெளியேறியுள்ளார்கள்.

அதன் காரணமாக சர்பராஸ் கான் அல்லது ரஜப் படிடார் ஆகிய 2 இளம் வீரர்களில் ஒருவருக்கு இப்போட்டியில் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக ரஜப் படிடார் உள்ளூர் கிரிக்கெட்டில் சுமார் 46 என்ற சராசரியில் மட்டுமே ரன்கள் குவித்துள்ளார். ஆனால் அவரை மிஞ்சும் அளவுக்கு உள்ளூர் போட்டிகளில் அசத்தி வரும் சர்பராஸ் கான் 69 என்ற அபாரமான சராசரியில் ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

யோசிச்சு கொடுங்க:
அதன் காரணமாக இரண்டாவது போட்டியில் அவர் அறிமுகமாக விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் அழுத்தமான நாக் அவுட் போட்டிகளில் சர்பராஸ் கான் பெரிய ரன்களை அடித்ததில்லை என்று முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார். எனவே அவருக்கு இந்திய அணி நிர்வாகம் யோசித்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“கடந்த 2 – 3 வருடங்களாக சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருப்பதால் தற்போது இந்திய அணியில் தேர்வாகியுள்ள அவருக்கு பாராட்டுக்கள். சமீபத்தில் அவர் இங்கிலாந்து ஏ அணிக்கு எதிராகவும் ரன்கள் அடித்தார். இருப்பினும் தொடர்ச்சியாக அசத்தி வரும் அவர் மீது 2 கேள்விகள் இருக்கிறது. முதலாவதாக 15 பேர் தேர்வு செய்யப்பட்டாலும் களத்தில் 11 பேர் மட்டுமே விளையாடுவார்கள் என்பதால் அதில் அவருக்கு இடம் உள்ளதா? என்பது கேள்வியாகும்”

- Advertisement -

“2வதாக பெரிய போட்டிகளில் அவர் ரன்கள் அடித்ததில்லை என்று நான் நெருங்கிய சிலர் சொல்லி கேள்விப் பட்டுள்ளேன். முதல் தர கிரிக்கெட்டை பற்றி நீங்கள் பேசும் போது இந்தியாவில் 37 அணிகள் இருக்கிறது. அதில் பெரும்பாலான சமயங்களில் நீங்கள் சுமாரான அணிக்கு எதிராகவே விளையாடுவீர்கள். இதை சில அணிகளை கொச்சைப்படுத்துவதற்காக நான் சொல்லவில்லை”

இதையும் படிங்க: 98/1 அங்கேயும் திணறலா.. ஏமாற்றிய ரிங்கு, சுதர்சன்.. இங்கிலாந்து லயன்ஸிடம் சறுக்கிய இந்தியா ஏ

“அதே போல சர்ப்ராஸ்க்கு எதிராகவும் நான் இதை பேசவில்லை. ஆனால் அவர் அடித்துள்ள ரன்களின் தரத்தை பார்ப்பது முக்கியம். மேலும் சர்ப்ராஸ் – சுப்மன் கில் என்ற சூழல் வரும் போது அணி நிர்வாகம் இருவருக்கும் சமமான வாய்ப்பு கொடுப்பார்களா? கண்டிப்பாக மாட்டார்கள். அவர்கள் ஒரு வீரரின் திறமையை பார்த்து அதற்கு தகுந்தார் போல் வாய்ப்பு கொடுப்பார்கள்” என்று கூறினார்.

Advertisement