எதுக்கு மேலயும் சர்பராஸ் கான் என்ன தான் பண்ணனும்? இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக – தரமான சம்பவம்

Sarfaraz-Khan
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியில் தேர்வாவது என்பது அனைவருக்கும் ஒரு கனவாக இருக்கும். அந்த வகையில் இந்திய அணிக்காக எப்படியாவது அறிமுகமாகி விட வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாகவே மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் சர்பராஸ் கான் போராடி வருகிறார். ஆனாலும் இன்றளவும் அவருக்கு அந்த கனவு நிறைவேறவில்லை.

19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணி மற்றும் ஐபிஎல் தொடர்களில் விளையாடியுள்ள சர்பராஸ் கான் எவ்வளவோ போராட்டத்தை சந்தித்தாலும் இதுவரை இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பினை பெறவில்லை.

- Advertisement -

அதிலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் சதத்திற்கு மேல் சதம் அடித்து தனது திறமையை அவர் நிரூபித்து வந்தாலும் ஒவ்வொரு இந்திய டெஸ்ட் தொடர் அறிவிக்கப்படும்போதும் அவர் பெயர் அணியில் இடம் பெறுவதில்லை.

மேலும் ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் போதும் அவர் தேர்வு செய்யப்படுவாரா? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வரும். ஆனால் இன்றளவும் சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

- Advertisement -

இருப்பினும் இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான நான்கு நாட்கள் பயிற்சி போட்டியில் நேற்று மீண்டும் அவர் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 160 பந்துகளில் 18 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 161 ரன்கள் குவித்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த நிலையில் அவர் அணியை மீட்டுக் கொண்டு வந்தார்.

இதையும் படிங்க : அத்தனை சதம் அடிச்சு என்ன பயன்? இந்திய அணியில் அந்த மாற்றத்தை செய்வேன்.. டிகே’விடம் ரோஹித் சர்மா ஆதங்கம்

இப்படி அற்புதமான செயல்பாட்டை இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக செய்திருந்தாலும் அவர் இனிவரும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம் பிடிப்பாரா? என்பது சந்தேகம்தான். இந்திய ஏ அணிக்காக தற்போது அசத்தி வரும் அவருக்கு கட்டாயம் இந்திய அணியில் ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement